1 லட்சம் போட்டால் 4 லட்சம்... 386% லாபம் தரும் தங்க பத்திரம் முதலீடு பற்றி தெரியுமா..?

23 hours ago 16

Last Updated:May 09, 2026 5:40 PM IST

இந்த திட்டத்தில் ஒருவர் 2018ல் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு தோராயமாக ரூ.4,86,320 ஆக உயர்ந்திருக்கும்.

அதிக லாபம் தந்த ஆர்பிஐ திட்டம்

2018ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்குச் சந்தோஷம் தரும் ஒரு செய்தி வந்துள்ளது. ரிசர்வ் வங்கி 386 சதவீதம் லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளதால் இதில் முதலீடு செய்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக லாபம் தந்த ஆர்பிஐ திட்டம்

நாடு முழுவதிலும் அதிகமான மக்கள் தங்கத்தின் முதலீடு செய்கின்றனர். அவசர காலகட்டங்களில் உதவும் என்பதால் தங்கத்தை விரும்பி வாங்குகின்றனர். ரிசர்வ் வங்கி டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேமிக்க 2015ஆம் ஆண்டு தங்க பத்திரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதிக லாபம் தந்த ஆர்பிஐ திட்டம்

தொடக்க காலங்களில் சற்று தயக்கம் இருந்தாலும் அதிகமான மக்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். கடன் பத்திரத்தின் ஆயுட்காலம் எட்டு ஆண்டுகள் என்பதால் அதை தொடர்ச்சியாக முடிவுற்று வருகிறது. 2018 SGB திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தற்பொழுது தங்கத்தில் ஜாக்பாட் லாபம் கிடைத்துள்ளது.

அதிக லாபம் தந்த ஆர்பிஐ திட்டம்

2018ல் ஆன்லைன் மூலம் தங்க பத்திரம் வாங்கியவர்களுக்கு முதலீடாக ஒரு கிராமுக்கு 3064 தரப்பட்டது. ஆனால் இன்றைய மதிப்பில் 14,901 விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிராம் இருக்கு 11,837 ரூபாய் லாபமாக கிடைத்துள்ளது. மேலும் வருடத்திற்கு நாம் செலுத்தியுள்ள தொகைக்கு வட்டி விகிதமாக 2.50 சதவிகிதம் தொகை சேர்த்து வழங்கப்படும்.

அதிக லாபம் தந்த ஆர்பிஐ திட்டம்

2018ல் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு தோராயமாக ரூ.4,86,320 ஆக உயர்ந்திருக்கும். தங்கபத்திரம் மூலம் 386 சதவிகிதம் லாபம் கிடைத்துள்ளதால் பலருக்கும் தற்பொழுது இதில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும். ஆனால் இதன் மூலமாக மத்திய அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதால் ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திரத்தை தற்பொழுது வெளியிடுவதை நிறுத்தி உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 உதவித் தொகை.. மத்திய அரசு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000.. விண்ணப்பிப்பது எப்படி?

  • தகுதியான கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 நிதியுதவி வழங்கப்படும்.

  • இந்த உதவித் தொகை தவணையாக வழங்கப்படும்.

  • இதுவரை 4.5 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் திட்டத்தில் சேர்ந்து பயன்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article