"100 நாள் வேலை திட்டம் முடக்கம் குறித்து ஈபிஎஸ் மூச்சு கூடவிடவில்லை"

1 hour ago 11

Last Updated:Dec 21, 2025 1:22 PM IST

மு.க.ஸ்டாலின் நெல்லை சுற்றுப்பயணத்தில் 11 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மத்திய அரசை 100 நாள் வேலைத் திட்டம் முடக்கியதற்காக கடுமையாக விமர்சித்தார்.

மு.க.ஸ்டாலின் - ஈபிஎஸ்
மு.க.ஸ்டாலின் - ஈபிஎஸ்

100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி மூச்சு கூடவிடவில்லை என்று முதலமைச்சர் சாடியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து இன்று பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், 15 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், நரசிங்கநல்லூரில் சிட்கோ தொழிற்பேட்டை, காயிதே மில்லத் நூலகம் உள்ளிட்ட 356 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 11 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 236 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நெல்லையப்பர் கோயில் தேரை சீரமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளாகவும், வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர் ஓடும் என்றும் தெரிவித்தார். கீழடி தொடங்கி அனைத்து அகழாய்வுப் பணிகளுக்கும் மத்திய அரசு தடை போட்டு வருவதாகவும், இல்லாத நாகரிகத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் பார்வையிட வேண்டும் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

Read Entire Article