EPFO ஊழியர்களின் வசதிக்காக பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. EPFO உறுப்பினர்களுக்காக 13 வகையான சிக்கலான பணத்தை திரும்ப எடுக்கும் விதிகள் மூன்று முக்கியப் பிரிவுகளாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கணக்கிலிருந்து பணம் எடுப்பது எளிதாகியுள்ளது. 1. நோய், கல்வி, திருமணத் தேவைகள் 2. வீட்டு வசதித் தேவைகள், 3. சிறப்புச் சூழ்நிலைகள் என மூன்று பிரிவுகள் உள்ளன.
இப்போது EPFO உறுப்பினர்கள் 100% வரை பணத்தை எடுக்கலாம். இதில் ஊழியர் மற்றும் முதலாளியின் பங்களிப்பும் அடங்கும். கல்விக்கு 10 மடங்கும், திருமணத்திற்கு 5 மடங்கும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதி வித்டிராக்களுக்கும் 12 மாத குறைந்தபட்ச சேவை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சிறப்புச் சூழ்நிலைகளில், பணம் எடுப்பதற்கான காரணத்தைக் கூறத் தேவையில்லை, இதனால் நிராகரிப்பு குறையும். ஓய்வூதியக் காரணங்களுக்காக 25% கணக்கு இருப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 8.25% வட்டி தொடரும். இந்த மாற்றங்கள் 100% தானியங்கி கிளைம் செட்டில்மென்ட்டை வழங்கும்.