புதுச்சேரி: மே 9 –
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்​வ​ராக அவர் பதவி​யேற்​கிறார்.
புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள என்​ஆர்​.​காங்​கிரஸ் 12, பாஜக 4, அதி​முக, லஜக முறையே ஒரு இடத்​தில் வெற்றி பெற்​றுள்​ளன.
புதுச்​சேரி​யில் உள்ள 30 எம்​எல்​ஏக்​களில் ஆட்சி அமைக்க 16 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. அதேநேரம் தற்போது தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 18 எம்​எல்​ஏக்​கள் பலம் உள்​ள​தால் மீண்​டும் ரங்​க​சாமி தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைய உள்​ளது.
ஏற்​கெனவே கடந்த 3 நாட்​களுக்கு முன் என்​ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித்​தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். அதே போல் பாஜக​வின் சட்​டப்​பேர​வைக் கட்​சித்​ தலை​வ​ராக நமச்​சி​வா​யம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.
என்​டிஏ கூட்​டணி அமைச்​சர​வை​யில் பாஜவுக்கு எத்​தனை அமைச்​சர்​கள் என்ற முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை நடந்​தது. இதில் எந்த முடி​வும் எட்​ட​ப்படவில்​லை. அதைத்​தொடர்ந்​து, புதிய ஆட்சி அமைய முதல்​வர் பதவியை ரங்​க​சாமி தனது பதவியை ராஜி​னாமா செய்​து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் நேற்று முன்​தினம் கடிதம் அளித்​தார்.
இதைத்​தொடர்ந்து நேற்று நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பாஜக மேலிடப் பொறுப்​பாளர் மன்​சுக் மாண்​ட​வி​யா, ரங்​க​சாமி, பேர​வை​யின் பாஜக தலை​வர் நமச்​சி​வா​யம், அதி​முக மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், லட்​சிய ஜனநாயக கட்​சித் தலை​வர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் மற்​றும் என்​டிஏ கூட்​டணி எம்​எல்​ஏக்​கள் பங்​கேற்​றனர்.
அதன்​பிறகு பதவி​யேற்பு விழா தேதி பற்றி முடிவு செய்​யப்​படும்.
அமைச்​சர்​கள் பதவி யார் யாருக்​கு, எந்​தக் கட்​சி​யினருக்கு என்​பது பதவி தரும்​போது தெரி​யும். பேர​வைத் தலை​வர் யார் என்​ப​தை​யும் பிறகு தெரிவிக்​கிறேன்” என்​றார்.
என்​டிஏ எம்​எல்​ஏக்​கள் தரப்​பில் விசா​ரித்​த​போது, “வரும் 13-ம் தேதி ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெறும் விழா​வில் முதல்​வர் ரங்​க​சாமி பதவி​யேற்க முடிவு எடுத்​துள்​ளார்” என்று தெரி​வித்​தனர். இதுதொடர்​பான முறை​யான அறி​விப்பு விரை​வில் வெளி​யாகும் என்று தெரி​வித்திருந்தனர்.