18,000 வீவக வீடுகள் தேர்வு: புதிய வசதிகள், சீரமைப்புப் பணிகள்

1 hour ago 10

ad5e6c66-d7e5-4185-adbb-50cd555c4d58

மே 16ஆம் தேதி ‘யூத்பல்ஸ்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு குழுப் படம் எடுத்துக் கொண்ட (முதல் வரிசை, இடமிருந்து) மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, ஹார்ட்வேர் நெட்வொர்க் நிறுவனர் ரேமண்ட் ஹுவாங், ஹார்ட்வேர் நெட்வொர்க்கின் தலைவர் டிங் சொங் கியோங், நிர்வாகஇயக்குநர் ஷோனா லால் மற்றும் இளையர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முழுவதும் உள்ள ஏறக்குறைய 18,000 வீடுகளுக்கு புதுப்பொலிவு அளிக்கப்படவிருக்கிறது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்காக அவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனால் 18,000 வீடுகளும் புதிய வசதிகளையும் தோற்றத்தையும் பெறவிருக்கின்றன.

பிடோக், பீஷான், ஜூரோங் வெஸ்ட், பாசிர் ரிஸ், செங்காங், சிராங்கூன், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் உள்ளிட்ட குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள 198 புளோக்குகளில் 18,000 வீடுகள் இடம்பெற்றுள்ளன.

“வீட்டு உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சீர்செய்யப்படும். அது மட்டுமல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டின் குளியல் மற்றும் கழிவறைகளை மானியத்துடன் மேம்படுத்திக் கொள்ளலாம்,” என்று சனிக்கிழமை (மே 16) தேசிய வளர்ச்சி அமைச்சின் இரண்டாம் அமைச்சரான இந்திராணி ராஜா தெரிவித்தார்.

அரசாங்கம், இதற்காக 253 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியிருக்கிறது.

மேற்கூரை காங்கிரீட் உதிர்வது, மேற்கூரை கசிவு போன்ற பராமரிப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக 2007ல் இல்ல மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் நேச்சுர் வியூவில் நடைபெற்ற புளோக் விருந்து நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி இந்திராணி ராஜா, திட்டம் அறிமுகமானதிலிருந்து 409,000 வீடுகள் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

இப்பணிகளுக்காக அரசாங்கம் இதுவரை 5 பில்லியன் வெள்ளியை செலவழித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புக்கிட் பாத்தோக் ஈஸ்ட்டில் 14 புளோக்குகளில் உள்ள 1,600க்கும் மேற்பட்ட வீடுகள் வரப்போகும் இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்கு வீடு கட்டி முடிக்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

அதன் பிறகு குடியிருப்பாளர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் தகுதி பெற்ற சிங்கப்பூர் குடும்பங்களில் 75 விழுக்காட்டினர் சம்மதித்து வாக்களித்தால் மட்டுமே மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இல்ல மேம்பாட்டுத் திட்டத்தில் அத்தியாவசிய மேம்பாடுகள், விருப்பமான மேம்பாடுகள் என இரு வகைகள் இருப்பதாக அமைச்சர் இந்திராணி சொன்னார்.

அத்தியாவசிய மேம்பாட்டில் மேற்கூரை கான்கிரீட் உதிர்வது, விரிசல் போன்ற உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும். இதனால் பழைய வீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதற்காக, சிங்கப்பூர் குடிமக்களுக்கு ஏற்படும் செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

விருப்பமான மேம்பாட்டின்கீழ் புதிய நுழைவு வாயில் கதவுகள், கேட்கள், மேம்படுத்தப்பட்ட கழிவறை, குளியல் அறைகள் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. இவற்றுக்கான செலவில் வீட்டின் வகையைப் பொறுத்து அரசாங்கம் 95 விழுக்காடு வரை கழிவு வழங்குகிறது.

இல்ல மேம்பாட்டுத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகள், ‘ஈஸ்’ எனும் சுறுசுறுப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மூத்தோருக்கு உதவும் சாதனங்களைப் பொருத்திக் கொள்ளலாம் என்று வீவக தெரிவித்தது.

“உங்களில் பலர் ‘ஈஸ்’ திட்டம் பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால் 2024ல் மேம்படுத்தப்பட்ட அந்தத் திட்டம் பற்றி சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதன்கீழ் மூத்தோருக்கு ஏற்ற ‘ராக்கர் சுவிட்ச்’, தீ எச்சரிக்கை சாதனங்கள் உட்பட பல வசதிகளை செய்து கொள்ள முடியும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தகைய மேபாட்டுப் பணிகள் மூத்தோருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன.

Read Entire Article