2026 முழுவதும் பொருளியல் வளர்ச்சி 2% முதல் 4%: புதிய கணிப்பு

2 hours ago 19

4639aba2-50f4-4c86-9dae-bfc23d533e6a

இவ்வாண்டு முழுவதும் பொருளியல் வளர்ச்சி முன்பு கணித்ததைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், அதன் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்ப்பை இன்னும் அதிக அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

2026ஆம் ஆண்டு முழுவதும் இரண்டு முதல் 4 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று புதிய கணிப்பு கூறுகிறது.

கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பொருளியல் சிறப்பாகச் செயல்பட்டதன் எதிரொலியாக இந்தக் கணிப்பு இடம்பெறுகிறது.

வர்த்தக, தொழில் அமைச்சு, செவ்வாய்க் கிழமை (பிப்ரவரி 10) அன்று புதிய கணிப்பை வெளியிட்டது.

முந்தைய கணிப்பான ஒரு விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரையிலான பொருளியலைவிட 2026ல் வளர்ச்சி கூடுதலாக இருக்கும் என்று அது தெரிவித்தது.

2025ல் பொருளியல் 5 விழுக்காடாக வளர்ச்சி கண்டதாகக் கூறிய அமைச்சு, இதற்கு முன்பு ஜனவரியில் முன்னுரைக்கப்பட்ட 4.8 விழுக்காடு வளர்ச்சியை அது மிஞ்சியிருந்ததை சுட்டிக்காட்டியது.

2025ல் ஆண்டு அடிப்படையில் பார்த்தால் வளர்ச்சி நான்காவது காலாண்டில் 6.9 விழுக்காடாக வளர்ச்சி கூடியதைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டிலும் வளர்ச்சி இன்னும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இது, முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.7 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். மேலும் 3வது காலாண்டின் 4.6 விழுக்காடு வளர்ச்சியை அது மிஞ்சியிருந்தது.

2025 ஆம் ஆண்டில் பதிவான 5 விழுக்காடு வளர்ச்சி, 2024 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட 5.3 விழுக்காடாக விரிவுபடுத்ததிலிருந்து சற்றுக் குறைவாகும். 2024ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய மதிப்பீட்டான 4.4 விழுக்காட்டிலிருந்து உயர்த்தப்பட்டது.

கடைசியாக, 2021ஆம் ஆண்டில் பொருளியல் வேகமாக வளர்ந்தது. அப்போது அது கொவிட்-19 தொற்று நோயிலிருந்து மீண்டு 9.8 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது. .

Read Entire Article