25 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வரும் நடிகர் குடும்பம்: இலவச சிகிச்சை

2 hours ago 10

Last Updated:Dec 22, 2025 7:21 AM IST

பிரபல நடிகர்கள் குடும்பம் நடத்தி வரும் மருத்துவமனை ரூ. 750 கோடியில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

 இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நடிகர் கடந்த 50 வருடங்களாக ஹீரோவாக மட்டும் நடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பாலையா என அழைக்கப்படும் நடிகர் பாலகிருஷ்ணா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். 65 வயது கடந்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் ஆந்திராவின் இந்துபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார் பாலகிருஷ்ணா.

 'மாஸ் கடவுள்' என்று தெலுங்கு சினிமாவில் வர்ணிக்கப்படும் நடிகர் பாலகிருஷ்ணா இதுவரை 109 படங்களில் நடித்துள்ளார். எல்லோருக்கும் தெரிந்தது போல் ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மற்றும் முதல்வரான என்டிஆரின் 6வது மகன் தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. தந்தையை பின்பற்றி சினிமாவுக்குள் வந்தார். தனது 14வது வயதில் நடிக்கத் தொடங்கிய பாலய்யா என்டிஆர் முதல்வரான காலகட்டத்தில் பீக்கில் இருந்தார். டாட்டம்மா கலா என்கிற படத்தில் சினிமாவில் குழந்தை நடிகராக அறிமுகமான இவர், 1980களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 50 வருடமாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

 பாலையாவின் தாயாரும் முன்னாள் முதல்வர் என்டிஆரும் மனைவியுமான பசவதாரகம் புற்றுநோயால் 1985ம் ஆண்டு உயிரிழந்தார். தனது மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததால், புற்றுநோய் பாதிப்பை உணர்ந்த என்டி ராமராவ் அதனை சரி செய்ய புற்றுநோய் மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தார்.

 அதன்படி, இந்தோ அமெரிக்க புற்றுநோய் அமைப்புடன் நந்தமுரி பசவதாரக ராமராவ் நினைவு புற்றுநோய் அறக்கட்டளை இணைந்து ஹைதராபாத்தில் நவீன புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்டு, 2000ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அதனை திறந்து வைத்தார். லாப நோக்கமில்லாத பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனை அன்றிலிருந்து இன்று வரை மலிவு விலையில் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

 நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இங்கே இலவச சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தற்போது இந்த மருத்துவமனையின் தலைவராக நடிகர் பாலகிருஷ்ணாவே செயல்பட்டு வருகிறார். இந்த மருத்துவமனை கட்டி 25 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் இதனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

 அதனடிப்படையில் தற்போது ஆந்திர தலைநகராக உள்ள அமராவதியில் 21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 750 கோடி செலவில் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வரும் 2028ம் ஆண்டு மருத்துவமனை முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 படுக்கை கொண்ட பெரிய அதேநேரம் அதிநவீன புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக இது செயல்படும் என பாலையா அறிவித்திருக்கிறார்.

 நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாயின் நினைவாக செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு சென்றுவரும் நடிகர் பாலகிருஷ்ணா அங்கே சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்திப்பது வழக்கம். அரசியல்வாதி முகங்களை தாண்டி பாலையாவின் இந்த தொண்டு அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து அவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தருவது உண்டு.

Weather Today | தமிழ்நாட்டில் மேலும் குளிர் அதிகரிக்கும்... வானிலை மையம் அப்டேட்..!

தமிழ்நாட்டில் மேலும் குளிர் அதிகரிக்கும்.. வானிலை மையம் அப்டேட்!

  • தமிழ்நாட்டில் குளிர் அதிகரித்து, அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

  • சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.

  • தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article