சிங்கப்பூர்க் குடிமக்களாக அல்லது நிரந்தரவாசிகளாக உள்ள தகவல் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவர்கள், ‘ஏஐஎக்ஸ்டெக்’ வகுப்புகளில் இலவசமாகச் சேரலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அடுத்த மூன்று ஆண்டுகளில் 40,000 தொழில்நுட்ப நிபுணர்களின் திறன்களை மேம்படுத்தத் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் திட்டமிடுகிறது.
இறுதியாண்டுth தகவல் தொழில்நுட்ப மாணவர்களும் அவர்களில் அடங்குவர் என்று ஆணையம் வெள்ளிக்கிழமை (மே 8) தெரிவித்தது.
தேசியச் செயற்கை நுண்ணறிவுத் தாக்கத் திட்டத்தின்கீழ் வரும் இந்தத் திட்டம், 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘டெசா’ (TeSA) எனப்படும் தொழில்நுட்பத்துறைத் திறன்பயிற்சித் திட்டத்தின் விரிவாக்கமாக உள்ளது.
தொழில்முறைப் பங்காளிகளுடனான உத்திபூர்வக் கூட்டுறவின்வழி ஏஐ திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
இந்தத் திட்டங்களில் ஒன்றான ‘ஏஐஎக்ஸ்டெக்’ (AIxTech), பொறுப்புணர்வுடன் கூடிய ஏஐ திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆணையத்தாலும் ‘ஏஐ சிங்கப்பூர்’ அமைப்பாலும் தொடங்கப்பட்ட இந்த ‘ஏஐஎக்ஸ்டெக்’ திட்டம், கிளாட் (Claude), கோடெக்ஸ் (Codex), ஜெமினை (Gemini) ஆகிய செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்தும் உரிமையை வழங்கவுள்ளது.
சிங்கப்பூர்க் குடிமக்களாக அல்லது நிரந்தரவாசிகளாக உள்ள தகவல் தொழில்நுட்ப இறுதியாண்டு மாணவர்கள், ‘ஏஐஎக்ஸ்டெக்’ வகுப்புகளில் இலவசமாகச் சேரலாம் என்று ஆணையம் தெரிவித்தது.
இந்தத் திட்டத்திற்கு ஏற்கெனவே கணிசமான வரவேற்பு கிட்டியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது. அத்துடன், தொழில்நுட்பத் துறை மட்டுமன்றி, மற்றத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளதாக அது கூறியது.
“உண்மையான தொழில்சார் தேவைகளுடன் ‘ஏஐஎக்ஸ்டெக்’ திட்டம் பொருந்தியிருப்பதை இந்தத் தொடக்கக் கால வரவேற்பு காட்டுகிறது. அத்துடன், அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளியலில் நிறுவனங்கள் தங்களது செயற்கை நுண்ணறிவுத் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதையும் இது எடுத்துக்காட்டுகிறது,” என்று ஆணையம் தெரிவித்தது.
.png)





English (US) ·