Last Updated:May 10, 2026 3:47 PM IST
500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக இருந்தபோதும், தனி பெரும்பான்மை கிடைக்காமல் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரினார் விஜய். இதனையடுத்து காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுடன் கூட்டணி அமைத்தது. அதேசமயம், திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஎம், விசிக, ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தன.
இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களை பெற்ற தவெக தலைவர் விஜய், இன்று காலை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதனை பலரும் கண்டித்துவருகின்றனர்.
மறுபுறம் முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய், நிகழ்ச்சி அரங்கிலேயே தான் அளித்த வாக்குறுதிகளில் மூன்று வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதை பொருள் களைப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார்.
இதில், 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் எனும் திட்டத்தில் மக்களிடத்திலேயே குழப்பம் ஏற்பட்டது. அதாவது 500 யூனிட்களுக்கு கீழ் 200 யூனிட் இலவசம் என்றால், 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் பயனர்களுக்கு பழைய நடைமுறையான முதல் 100 யூனிட் இலவசம் கிடைக்காதோ எனும் சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், 500 யூனிட்களுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் எனவும், 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு பழைய நடைமுறையான 100 யூனிட் மின்சாரம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)







English (US) ·