8 போர்களை நிறுத்திட்டேன்.. இன்னும் நோபல் பரிசு கிடைக்கல... டிரம்ப் மீண்டும் புலம்பல்!

4 hours ago 2

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட எட்டு சர்வதேச மோதல்களுக்குத் தீர்வு கண்டதாக மீண்டும் உரிமை கோரியுள்ளார். நோபல் பரிசுக்காக இதைச் செய்யவில்லை என்றும், உயிர்களைக் காப்பாற்றவே செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

2 Min read

Published : Oct 13 2025, 10:13 PM IST

13

இஸ்ரேலில் டிரம்ப் பேச்சு

இஸ்ரேலில் டிரம்ப் பேச்சு

அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கிடைக்காத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை எட்டு போர்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாக மீண்டும் உரிமை கோரியுள்ளார். மேலும், இந்தப் பணிகளை நோபல் பரிசுக்காகச் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் உட்பட ஏழு சண்டைகளைத் தீர்த்ததாக நான் கூறிவந்தேன். இப்போது இஸ்ரேல்-காசா மோதலையும் சேர்த்துள்ளேன். இது நான் தீர்வு கண்ட எட்டாவது போர் ஆகும். மேலும், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான தற்போதைய மோதலையும் தீர்க்கத் திட்டமிட்டுள்ளேன். நான் போர் தீர்ப்பதில் வல்லவன். அமைதியை ஏற்படுத்துவதில் நான் சிறந்தவன்," என்று கூறினார்.

23

நோபல் பரிசு பற்றி டிரம்ப்

நோபல் பரிசு பற்றி டிரம்ப்

நீண்ட ஆண்டுகளாக நடந்த மோதல்களைத் தான் ஒரு நாளிலேயே முடித்ததாக டிரம்ப் மேலும் கூறினார். "இந்தியா, பாகிஸ்தானை நினைத்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக நடந்த போர்களை நினைத்துப் பாருங்கள். 31, 32, 37 ஆண்டுகளாக நடந்த போர்கள் உள்ளன. அவற்றில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நான் அதில் பெரும்பாலானவற்றை ஒரு நாளிலேயே முடித்துவிட்டேன்," என்றார்.

நோபல் பரிசு அறிவிப்பு 2024 ஆம் ஆண்டிற்கானது என்றும், தான் இந்தப் போர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் தீர்வு கண்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். "நோபல் குழுவுக்கு நியாயம் செய்வதாக இருந்தால், அது 2024 ஆம் ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், நான் இதை நோபல் பரிசுக்காகச் செய்யவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதற்காகச் செய்தேன்," என்று அவர் வலியுறுத்தினார்.

33

இந்தியாவின் நிலைப்பாடு

Image Credit :

X-@iEvangelize

இந்தியாவின் நிலைப்பாடு

பாகிஸ்தானின் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாள் தீவிர மோதலுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் அமலானது.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்த தான் மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் பலமுறை கூறிவரும் நிலையில், இந்தியா இதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் (DGMOs) இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே சண்டை நிறுத்தம் அமலானது என்றும், இதில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை என்றும் இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

Read Entire Article