Last Updated:May 13, 2026 5:31 PM IST
சூப்பர் ஸ்டார் நடிகர் ஒரே டைட்டிலில் 8 படங்கள் நடித்துள்ளார். அதில் ஒரு படம் மட்டும் தோல்வி அடைந்தது.

ஒரே டைட்டிலில் 8 திரைப்படங்கள். கிட்டத்தட்ட எல்லா டைட்டிலிலும் ஒரு வார்த்தை பொதுவாக இடம்பெற்றது. இதில் 7 திரைப்படங்கள் ஹிட்டாகின. ஒரு படம் மட்டும் ஃப்ளாப். பொதுவாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமாரை ‘கிலாடி’ என ரசிகர்கள் கலாய்ப்பார்கள். அவர் எதாவது படம் ரீமேக் செய்வதாக இருந்தால் அதன் டைட்டிலில் ‘கிலாடி’ என சேர்த்துக்கொள்வார் என வேடிக்கையாக சொல்வது உண்டு.
அந்த வகையில் நடிகர் அக்ஷய்குமார் நடித்த 8 படங்களின் டைட்டிலில் ஒரே வார்த்தை இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட இதை ‘கிலாடி’ சீரிஸ் படங்கள் என்று சொல்லும் அளவுக்கு இப்படங்களின் டைட்டில் அமைந்துள்ளது. படத்தின் கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை. ஆனால், டைட்டில் மட்டும் தொடர்புடையது. பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க அக்ஷய் குமார் முயற்சி செய்து கொண்டிருந்தபோது, இந்தப் படங்கள் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.
கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ‘கிலாடி’ திரைப்படம் அக்ஷய்குமார் திரை வாழ்வில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. நான்கு கல்லூரி நண்பர்களின் கதையைச் சொன்ன ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இந்தப் படத்தில் அக்ஷய்குமாரின் உடல்மொழி இளைஞர்களை கவர்ந்தது.
‘கிலாடி’ என்ற வார்த்தைக்கு இளைஞர்களை கவரும் ஒரு வசீகரம் இருப்பதை திரையுலகினர் உணர்ந்தனர். இதே பெயரில் 8 திரைப்படங்கள் வெளியாக இந்தப் படம் தான் மூல காரணமாக அமைந்தது. இதன் மூலம் அக்ஷய் 'கிலாடி குமார்' என்ற புனைப்பெயரைப் பெற்றார்.
"கிலாடி (1992)" படத்தின் வெற்றிக்குப் பிறகு, 1994-ல் ‘மெயின் கிலாடி து அனாரி’ வெளியானது. இந்தப் படத்தில் அக்ஷய் மற்றும் சைப் அலி கான் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன், இந்தப் படம் அக்ஷய்குமாருக்கு நகைச்சுவை வரும் என்பதை நிரூபித்தது.
அதே ஆண்டில், "சப்சே படா கிலாடி" வெளியாகி, அக்ஷயின் வலிமையான பிம்பத்தை மேலும் உறுதிப்படுத்தியது. பின்னர் 1996-ல், "கிலாடியோன் கா கிலாடி" திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அக்ஷய் குமார், புகழ்பெற்ற மல்யுத்த வீரராக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.
1997-ல் வெளியான 'மிஸ்டர் & மிஸஸ் கிலாடி' திரைப்படத்தில் 'கிலாடி' என்ற வார்த்தையை நகைச்சுவைக்காகப் பயன்படுத்தினர். டேவிட் தவான் இயக்கிய இந்தப் படமும் ஒரு சூப்பர்ஹிட் ஆனது.
இதைத் தொடர்ந்து 1999-ல் வெளியான 'இன்டர்நேஷனல் கிலாடி' மற்றும் 2000-ல் வெளியான 'கிலாடி 420' போன்ற படங்கள் வெளிவந்தன. 'கிலாடி 420' படத்தில் பறக்கும் விமானத்தின் மீது அக்ஷய் குமார் நின்ற சாகசக் காட்சி, ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த ‘கிலாடி’ சீரிஸ் படங்களில் 2000-ல் வெளியான "கிலாடி 420" பாக்ஸ் ஆபிஸ் வெற்றி அடையத் தவறியதுடன், தோல்விப் படமாக அமைந்தது. 12 வருட இடைவெளிக்குப் பிறகு, 2012-ல் வெளியான "கிலாடி 786" வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அப்டேட்!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
.png)







English (US) ·