Actress | திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை.. 40 வயதில் கர்ப்பிணி.. யார் தெரியுமா? 

1 hour ago 11

Last Updated:May 17, 2026 10:05 AM IST

40 வயதான நடிகை திருமணம் ஆகாமல் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். யார் இவர் தெரியுமா?

 திருமணமாகாமல் 40 வயதில் கர்ப்பிணியான நடிகை தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். யார் அவர் என்பது குறித்து பார்ப்போம்.

 கடந்த 1999-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘சந்திரமுகி ப்ரணசாகி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பாவனா ராமன்னா. இவர் கன்னடத்தில் கவனம் செலுத்தி வந்தார். அதே 1999-ம் ஆண்டு மோகன் இயக்கி நடித்த ‘அன்புள்ள காதலுக்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்தார்.

 ‘நட்சத்திர காதல்’, ‘ஆஹா எத்தனை அழகு’, ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் இந்தியில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘ஃபேமிலி’ திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடித்தார். சிறந்த நடிகைக்கான கன்னட அரசின் மாநில விருதை வென்றவர். கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான ‘ஒட்ட’ மலையாள படத்தில் நடித்திருந்தார்.

 இந்நிலையில் நடிகை பாவனா ராமன்னா, கடந்த ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலானது.  “நான் ஒரு தாய், இரட்டைக் குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன், மேலும் மகிழ்ச்சியில் திளைக்கிறேன். எனது 20களிலும் 30களிலும், தாய்மை என்பது என் மனதில் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை” என பதிவிட்டிருந்தார்.

 மேலும், அதில், “எனக்கு 40 வயதானபோது, தாய் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. திருமணமாகாத பெண்ணாக, அந்தப் பாதை எளிதாக இருக்கவில்லை. பல IVF கிளினிக்குகள் என்னை அடியோடு நிராகரித்தன. ஆனால் பிறகு நான் பெங்களூரில் ஒரு மருத்துவரைச் சந்தித்தேன். அவர் எனக்கு ஆதரவளித்தார். முதல் முயற்சியிலேயே நான் கருவுற்றேன்.

 "என் தந்தை, உடன்பிறப்புகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பெருமையுடனும் அன்புடனும் எனக்குத் துணையாக நின்றனர். சிலர் என் முடிவைக் கேள்விக்குள்ளாக்கினர். என் குழந்தைகளுக்குத் தந்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் கலை, இசை, கலாச்சாரம் மற்றும் அன்பு நிறைந்த ஒரு வீட்டில் வளர்வார்கள்." என தெரிவித்திருந்தார்.

 கடந்த ஆண்டு இறுதியில் பாவனாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அதில் ஒரு குழந்தை மட்டுமே உயிர் பிழைத்தது. அந்த குழந்தைக்கு ருக்மணி என பெயரிட்டுள்ளார். திருமணமாகாமல் குழந்தை பெற்று வளர்த்து வருகிறார் பாவனா ரமன்னா. சினிமாவிலும் கவனம் செலுத்துகிறார்.

"இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டால்.." பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை!

"பயங்கரவாதிகளை தூண்டினால்.." - இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!

  • பயங்கரவாதிகளை தூண்டினால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இல்லாமல் போகலாம்.

  • பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தால் இந்திய ராணுவம் பதிலடி.

  • 2023 மே 7 பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article