இந்த தினசரி ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி அமையும் என்பதை விவரிக்கிறது. தொழில், நிதிநிலை, உடல்நலம் மற்றும் உறவுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.
112
மேஷம் (Aries)
மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களது ஆர்வமும் உற்சாகமும் மேலோங்கும். சேமிப்பு, புதிய முயற்சி, வேலைப்பணி ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்படும். பணப் பிரச்சினைகள் இருந்தால் கவனமாக அணுக வேண்டும். நண்பர்கள் உதவி செய்யலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானம் வரலாம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற சிறிது பொறுமை காக்க வேண்டும். அவசரப்படுவதால் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். இன்றைய நாள் உங்களுக்கு நன்றாகவே செல்லும். கலைஞர்களுக்கு இன்று ஒரு நல்ல நாள். இன்று பிரச்சனையில் சிக்கினால் நண்பரின் உதவியைப் பெறுவீர்கள்.
212
Image Credit :
Adobe Stock
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்களது நிதி நிலை சுமாராக இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு வரலாம். இருந்த போதிலும் குருவின் ஆதிக்கத்தால் உங்கள் நிதிப் பிரச்சனைகள் தீரக்கூடும். பணி இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டு வேலைகளைத் தள்ளிப் போடாமல் செய்து முடியுங்கள். காதல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் மன கசப்புகள் ஏற்படலாம். அன்பான வார்த்தைகளே அதற்கு சரியான தீர்வாக இருக்கும். சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு இந்த நாள் சாதகமானது. சாலையில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. இன்று உங்களுக்கு செல்வாக்கு மிக்க நபரின் ஆதரவு கிடைக்கலாம்.
312
மிதுனம் (Gemini)
மிதுன ராசி நேயர்களே, வார்த்தைகளில் கவனம் தேவை. தவறான சொற்கள் பிணிவினையை உண்டாக்கலாம். புதிய வாய்ப்புகள் தோன்றலாம், அதனை தக்கவைத்துக்கொள்ளவும். பயணங்கள் சிரமத்தை தரும் என்பதால் கவனம் தேவை. பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். பால்ய நண்பர் அல்லது செல்வாக்கு மிக்க ஒருவரிடமிருந்து உதவி பெறலாம். இன்று புதிய வேலை கிடைப்பதற்கு வலுவான வாய்ப்புள்ளது. வெளிப் பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அரசியலில் புகழ் உயரக்கூடும். குடும்பப் பிரச்சனைகள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் நல்லது. கூட்டாகச் செய்யும் எந்த வேலையிலும் புகழ் பெற வாய்ப்புள்ளது.
412
கடகம் (Cancer)
கடக ராசி நேயர்களே, இன்று குடும்பம் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாசமும் ஆதரவும் கிடைக்கும். பணியில் கடின உழைப்பு மற்றும் ஒழுக்கம் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். செலவுகளில் கட்டுப்பாடு தேவை.இன்று மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவீர்கள். இன்று ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். அனுபவமுள்ளவரின் ஆலோசனையால் சட்டப் பாதுகாப்பு பெறலாம். உடல் பலவீனத்தால் அவதிப்பட நேரிடலாம். மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு கிடைக்கும். எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இன்று வெற்றி பெற யோகம் உள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த வாய்ப்பு கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். ஏதேனும் முக்கிய விவாதங்கள் இருந்தால் அதை முடித்துவிடுங்கள்.
512
Image Credit :
Asianet News
சிம்மம் (Leo)
சிம்ம ராசி நேயர்களே, அவசியமானதை முதலில் முதலில் செய்யுங்கள். பணியில் கவனம் கட்டாயம். உங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். இன்று செலவுகள் அதிகரிக்கலாம். நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேறலாம். வியாபாரத்திற்கும் இன்று ஒரு நல்ல நாள். பண வரவு அதிகரிக்கும். முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை கொடுக்கும். உயர்கல்வி பயில்பவர்களுக்குச் சிறப்பு வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலைப்பளு காரணமாக உடல் பலவீனம் ஏற்படலாம். வெளிப் பிரச்சனைகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.
612
Image Credit :
AI Generated
கன்னி (Virgo)
கன்னி ராசி நேயர்களே, இன்று காரியங்களை கச்சிதமாக முடிக்க திட்டமிடல் மிகவும் முக்கியம். பணியில் சிறிய பிழைகளை பரிசீலிக்க நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரம் அல்லது பிற துறைகளில் முதலீடு செய்வதற்கு முன் யோசியுங்கள். முதலீடுகளில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் திடீரென நஷ்டம் வர வாய்ப்புள்ளதால் நிதானம் தேவை. முதுகுவலி பிரச்சினை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயணம் மகிழ்ச்சியாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளையின் செயலால் மனம் மகிழ்ச்சியடையும். எந்த விஷயத்திலும் இன்று அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.
712
விருச்சிகம் (Scorpio)
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் திறமை வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் தோன்றும். புதிய நண்பர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். உறவுகளில் உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்கள் ஏற்படும். அன்பான வார்த்தைகளை பயன்படுத்தினால் மன கசப்புகள் வராது. தொழல் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும் சாத்தியம். சரியான உணவு மற்றும் ஓய்வில் கவனம் தேவை. முதலீடுகள் சரிவர ஆய்வு செய்ய வேண்டும். அபாயம் இருக்கலாம்.
812
தனுசு (Sagittarius)
தனுசு ராசி நேயர்களே,புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்புக்கு தகுந்தாற்போல் லாபம் கிடைக்கும். பயணங்கள் சிறிது சவால்களுடன் இருக்கலாம், திட்டமிடுதல் முக்கியம். சிந்தனையில் தெளிவு, மனஅமைதி தேவை. சிறு உடற்பயிற்சிகள், மனஅமைதிக்கு நேரம் ஒதுக்க வேண்டும். தம்பதிகள் இடையே புரிதல் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே இருக்கும் என்பதால் பிரச்சினை வராது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பண வரவு திருப்தி தந்தாலும் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
912
Image Credit :
adobe stock
மகரம் (Capricorn)
மகர ராசி நேயர்களே, இன்று பணியில் தொடக்கம் சிறப்பாக இருக்கும். பண முயற்சியில் நீண்ட கால பயன்கள் கிடைக்கும். குடும்ப உறவுகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறிய காயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காதலர்கள் இடையே அன்பு அதிகரிக்கும். தம்பதிகள் இடையே புரிதல் ஏற்படும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் சிந்தனை வந்து செல்லும். நல்லவர்கள் உதவி செய்வர். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் மனதில் நிம்மதி ஏற்படும்.
1012
கும்பம் (Aquarius)
கும்ப ராசி நேயர்களே, இன்று மனநிலை சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும். வியாபாரம் களைகட்டும். புதிய ஆர்டர்கள் உங்களை வந்தடையும். உறவினர்களிடம் இருந்து விமர்சனங்கள் ஏற்படலாம். சரியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டால் புரிதல் ஏற்படும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம், நடை பயிற்சி அவசியம். ஆலயம் சென்று வந்தால் நிம்மதி கிடைக்கும்.
1112
துலாம்
துலாம் ராசி நேயர்களே, பணியிலும் குடும்பத்திலும் எதையும் சீராக சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். முடிவெடுக்கும்போது உடனடி உணர்ச்சியை விட சிந்தனையுடன் அணுக வேண்டும். வேலைப்பாடுகளில் கூட்டுப்பணி நல்ல பலனை தரும். நண்பர் அல்லது சக ஊழியரிடமிருந்து ஆலோசனை கிடைக்கலாம். பண வரவு மிதமாக இருக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பேச்சால் சரியாகிவிடும். உடல் நலத்தில் சோர்வு ஏற்படக்கூடும். ஓய்வை தவிர்க்காதீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மன அமைதியை அளிக்கும் நாள்.
1212
மீனம் (Pisces)
மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் படைப்பாற்றல் உச்சியில் இருக்கும். பணியில் புதிய வாய்ப்புகள் உண்டு. சந்தோஷம் களைகட்டும். புதிய பணிகள் கிடைக்கும் வாய்ப்பகள் உண்டு. நிம்மதியும் சந்தோஷமும் பல மடங்கு அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். பரிசு பொருட்கள் கிடைக்கும் சூழல் ஏற்படும். புதிய நண்பர்கள் உதவி செய்வர்.வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.