Bharathiraja | இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

2 hours ago 7

Last Updated:Jun 10, 2026 10:35 AM IST

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், பாரதிராஜா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம்  திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும்  அடைந்தேன்.

கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர்  பாரதிராஜா அவர்கள்.  தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

Jun 10, 2026 10:35 AM IST

Read Entire Article