Last Updated:Dec 21, 2025 1:34 PM IST
Bigg Boss 9: பிக் பாஸ் 9 இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில் வீட்டில் இன்னமும் ஏராளமான போட்டியாளர்கள் இருப்பதால் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என கூறப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 9 இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் நிலையில் உள்ளது. போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கடந்த வாரம் போல இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனாக ஆதிரை மற்றும் fj வெளியேறக்கூடும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆதிரை இரண்டாம் வாய்ப்பாக வீட்டுக்குள் நுழைந்தபோதும், இதுவரை அவரது விளையாட்டில் பெரிய மாற்றமோ முன்னேற்றமோ இல்லை என்றும், கேமில் சுவாரசியம் சேர்க்கவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் அவர் வெளியேறும் வாய்ப்பு அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிரஜின் வெளியேறியதிலிருந்து சாண்ட்ராவும் வீட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் பிறர் கேமையும் கெடுக்கும் வகையில் செயல்படுகிறார் என்ற விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். குறிப்பாக வாரம் முழுவதும் எந்த உத்வேகமும் இல்லாமல் மனமுடைந்து இருப்பதும், வீட்டில் அனைவரும் தான் சொல்லுவது போல் நடந்து கொள்ள வேண்டும் என்று என்பதுபோல் இருப்பது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டுவதாகத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சாண்ட்ராவும் எவிக்ஷன் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சாண்ட்ரா தனது விளையாட்டை மட்டும் அல்லாமல் அமித்தின் கேமையும் பாதித்து வருகிறார் என்றும், அவர் வீட்டுக்குள் தொடர்ந்தால் மற்ற போட்டியாளர்களின் ஆட்டமும் கெட்டுப்போகும் என்றும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் நிகழ்ச்சியின் ஓட்டத்தை கருத்தில் கொண்டு, அவரை வெளியேற்றலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இன்னொரு எதிர்பார்ப்பு பட்டியலில் பார்வதியும் இடம் பெற்றுள்ளார். முன்பு அவர் பல பிரச்சனைகளில் நேரடியாக குரல் கொடுத்து வந்தார். ஆனால் கம்ருதினுடன் காதல் வலையில் விழுந்ததிலிருந்து அவரது விளையாட்டும், கம்ருதினின் ஆட்டமும் பாதிக்கப்பட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் ‘தான் வெளியே செல்ல வேண்டும்’ என்று பிக் பாஸிடம் பார்வதி தெரிவித்ததும், அவர் வெளியே செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன, இந்த கருத்துகள் எந்த அளவுக்கு உண்மை என்பதை, இந்த வார எவிக்ஷன் முடிவுகள் தான் தெளிவுபடுத்தும்.

2026-ல் தங்கம், வெள்ளி விலை இதுதான்.. நிபுணர்கள் விளக்கம்!
2026ல் தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1.5-1.6 லட்சம் என கணிப்பு.
வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.2,03,000, அவுன்ஸ் ஒன்றுக்கு $70 வரை உயரலாம்.
.png)




English (US) ·