கிராம்பு ஆரோக்கியத்திற்கு நல்லாது என்றாலும், சில உடலநல பிரச்சினை உள்ளவர்கள் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் யாரெல்லாம் என்று இங்கு பார்க்கலாம்.
2 Min read
Published : Oct 14 2025, 11:24 AM IST
18
Cloves Side Effects
கிராம்பு சமையலறையில் பயன்படுத்தப்படும் மணம் கொண்ட ஒரு மசாலா பொருள் ஆகும். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்று ஒரு. அதனால் தான் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உணவுக்கு சுவை மற்றும் வாசனையை கொடுப்பது மட்டுமில்லாமல் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது. கிராம்பு ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்பட்டாலும் ஒரு சிலருக்கு அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அந்த வகையில் யாரெல்லாம் கிராம்பு சாப்பிடக்கூடாது? அதற்கான காரணம் என்ன? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
28
சர்க்கரை நோயாளிகள் :
சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை அளவை குறைக்க மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் கிராம்பு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இது இன்சுலின் உணர்வை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை குறைத்து விடும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன.
38
வாய்வழி பிரச்சனை உள்ளவர்கள் ;
உங்களுக்கு வாய்வழி பிரச்சனை இருந்தால் கிராம்பு, கிராம்பு எண்ணெய் என கிராம்பு சம்மந்தப்பட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது. மீறினால் எரிச்சல், கொப்புளங்கள் வாயில் ஏற்படும். சில சமயங்களில் தடுப்பு, வீக்கம் உருவாகும்.
48
இரைப்பைக் கோளாறு உள்ளவர்கள் :
இரைப்பைக் கோளாறு உள்ளவர்கள் கிராம்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் செரிமானக் குழாயில் எரிச்சல் ஏற்படுத்தி குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படும்.
58
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
கல்லீரல் நோய் உள்ளவர்கள் கிராம்பு, கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பு சப்ளிமெண்ட்களை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளவே கூடாது. மீறினால் அது கல்லீரல் செல்களில் நேரடி விளைவை ஏற்படுத்தி, மஞ்சள் காமாலை கல்லீரல் என்சைம்கள் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
68
குழந்தைகள் :
கிராம்பு எண்ணெயை குழந்தைகள் வாய் வழியாக தெரியாமல் எடுத்துக் கொண்டால் கூட யூஜனால் காரணமாக அவர்களது உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து உயிருக்கு ஆபத்தான விளைவை ஏற்படுத்திவிடும்.
78
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்லாலூட்டும் பெண்கள் :
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்லாலூட்டும் பெண்கள் உணவில் சிறிதளவு கிராம்பு சேர்க்கலாம். ஆனால் அதை சப்ளிமெண்டாகவோ, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் குழந்தையின் வளர்ச்சி தான் பாதிக்கப்படும்.
88
இரத்தக்கசிவு பிரச்சனை உள்ளவர்கள்
இரத்தக்கசிவு அல்லது இரத்தம் உறைதலுக்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் கிராம்பு சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் இருக்கும் யூஜனால் இரத்த உரைதலை மெதுவாக்கி விடும். மேலும் இது இரத்த உறைதலோடு இணைந்து இரத்தக்கசுவை மேலும் மோசமாகிவிடும். இதன் விளைவாக மூக்கில் ரத்தம் வடிதல், இரைப்பை குடல் இரத்தக்கசிவு போன்ற மோசமான இரத்த கசிவு நிலை ஏற்படும்.