Last Updated:May 10, 2026 7:15 PM IST
வரும் மே 15-ம் தேதி ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

துரந்தர் படத்தின் 3ஆம் பாகம் உருவாகுவது குறித்த முன்னணி நடிகர் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், மாதவன், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆதித்யா தர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் இந்தியர் அங்கிருக்கும் அரசியல் நிலைமையை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றுவதே படத்தின் ஒன்லைன். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் ரூ.1300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. பின்னர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘Dhurandhar: The Revenge’ என்ற இரண்டாம் பாகம் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தற்போது வரை ரூ.1800 கோடிக்கும் அதிகமான வசூலை இந்தப் படம் ஈட்டியுள்ளது. மொத்தமாக இரண்டு பாகங்களும் சேர்ந்து மொத்தம் ரூ.3000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளன.
வரும் மே 15-ம் தேதி ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் துரந்தர் படத்தின் 3ஆம் பாகம் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
இந்த படத்தில் ஜமீல் ஜமாலியாக நடித்துள்ள ராகேஷ் பேடி துரந்தர் 3 படம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
துரந்தர் 2 படத்தை பொருத்தளவில் ஒற்றனாக நடித்த ஹம்சா தனது மிஷனை முடித்து திரும்பி விட்டதால் துரந்தர் 3 பாகம் வரும் என்று சொல்ல முடியாது.
ஆனால் இது ஒரு பிரான்சைஸ் என்பதால் வேறு நடிகர்களை வைத்து துரந்தர் 3 படம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)







English (US) ·