இந்த தீபாவளிக்கு கடைகளில் கிடைப்பது போல அதிரசம் உடையாமல் உதிராமல் சூப்பராக செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு தவிர நம் அனைவரும் நினைவுக்கு வருவது பலகாரங்கள் தான். அதிலும் குறிப்பாக அதிரசம் தான் முதலில் நினைவுக்கு வரும். அதிரசம் செய்யும்போது சரியாகவே வராது உடைந்து விடும் அல்லது உதிரும். இதற்கு நீங்கள் தவறுகளே காரணம். அந்தத் தவறுகளை தவிர்த்தாலே போதும் அதிரசம் பூரி போல உப்பி வரும். சாப்பிடுவதற்கு மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த பதிவில் அதிரசம் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள் குறித்து பார்க்கலாம்.
அதிரசம் செய்யும்போது பண்ணக் கூடாத தவறுகள் :
1. அளவு ரொம்ப முக்கியம்
அதிரசம் செய்வதற்கு வெல்லம் மற்றும் அரிசி ரொம்ப முக்கியம். ஆனால் புழுங்கல் அரிசி பயன்படுத்தவே கூடாது. பச்சரிசி தான் பயன்படுத்த வேண்டும். அதுபோல மற்ற வெல்லத்தை விட பாகு வெல்லும் தான் சிறந்தது. ஒரு கிளாஸ் அரிசிக்கு 3/4 கிளாஸ் வெல்லம் எடுக்க வேண்டும். அதைவிட கூடவோ, குறையவோ கூடாது. வெல்லத்தை நன்கு நுணுகிவிட்டு அளவு எடுங்கள் சரியாக இருக்கும்.
2. சரியான பாகுபதம் :
அதிரசம் உடையாமல் உதிராமல் சரியாக வர வேண்டுமென்றால் அதற்கு பாகு காய்ச்சும் பக்குவம் ரொம்பவே முக்கியம். இதை சரியாக காய்ச்சி செய்து விட்டாலே போதும் அதிரசம் நன்றாக வந்து விடும். இதற்கு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பாகு திக்காக கம்பி பதத்திற்கு வந்தவுடன் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில் 3 சொட்டுப் பாகுவை விடுங்கள். பாகு தண்ணீரில் கரைந்தால் சரியான பதத்திற்கு இன்னும் வரவில்லை என்று அர்த்தம். கரையாமல் அப்படியே கட்டியாக இருந்தால் அதை உங்களது கையில் எடுத்து உருட்டி பார்க்கவும். அது மென்மையாக இருந்தால் பர்ஃபெக்ட்டான பாகு ரெடி.
3. அரிசி மாவு :
அதிரசம் சூப்பராக வர பாகு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அரிசி மாவு முக்கியம். அதிரசத்திற்கு புழுங்கல் அரிசியை கட்டாயம் சுமார் 2-3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு சுத்தமான காட்டன் துணியில் அரிசியை போட்டு பரப்பி 20 நிமிடங்கள் ஃபேன் காற்றில் காய வைக்கவும். பிறகு மிக்ஸியில் மையாக அரைக்கவும். மிஷினில் கொடுத்து கூட அரைக்கலாம்.
அரிசியை இப்படி ஊறவைத்து, காய வைத்து அரைக்க நேரமில்லை என்று சில சொல்லி கடைகளில் இன்ஸ்டன்ட் மாவை வாங்கி அதில் அதிரசம் சுடுவார்கள். ஆனால் அதில் அதிரசம் சுட்டால் உடையும், சாப்ட் ஆகவும் இருக்காது இருக்கும்.
4. அதிரச மாவு பிசையும் முறை :
அரிசி மாவு போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பாகு ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள். தேவையான அளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். நெய் சேர்த்தால் அதிரசம் சாஃப்டாக வரும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் தடவிய பிசைந்து வைத்த மாவை அதில் மாற்றி விடுங்கள். பிறகு அந்த மாவில் உடனே அதிரசம் சுடாமல் மறுநாள் சுட்டால் சூப்பராக இருக்கும்.
பிசைந்த அதிரச மாவை சுமார் 8 முதல் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு நேரமில்லை என்றால் குறைந்ததோ மூன்று மணி நேரமாவது புளிக்க வைக்கவும்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறைகள்படி அதிரசம் செய்தால் சூப்பராக வரும்.