Dude: "அங்கிளா, அப்பாவா நடிக்கிறது எல்லாம் பண்ணுறது இல்லனு சொல்லிட்டேன், ஆனா"- சரத்குமார்

18 hours ago 13

`டூட்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்று வருகிறது.

Published:31 mins agoUpdated:31 mins ago

நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் ஆகியோர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்று வருகிறது.

 `டூட்' படம்

`டூட்' படம்

இதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், "பிரதீப் ஒரு மிகப்பெரிய ஸ்டார். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். உங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்துக்கொண்டிருக்கின்ற ஒரு டூட்.

கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் சிறப்பாக செய்யக்கூடிய ஒரு இயக்குநர் நடிகர்.

நிறைய ஐடியாக்கள் அவரிடம் இருக்கிறது. உங்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோஷம்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்னிடம் ஃபோனில் சொன்னார். பிரதீப்பிற்கு அங்கிள் ஆக நடிக்கிறீர்கள் என்று சொன்னார்.

அங்கிளாக நடிக்கிறது, ஒரு பொண்ணுக்கு அப்பாவாக நடிக்கிறது எல்லாம் நான் இப்போது பண்ணுவதில்லை என்று சொன்னேன்.

நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார்

அதனால் இந்தக் கதையை என்னிடம் சொல்லாதீங்க என்று சொன்னேன். இருந்தாலும் நேரில் வந்து கதையை சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. ஒரு புதிய சரத்குமாரை காண்பித்திருக்கிறார். அதற்கு மிக்க நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Read Entire Article