Last Updated:May 17, 2026 9:32 PM IST
”தேர்தலுக்கு முன்னதாகவே தொகுச்சட்டசபை அமையும் என கணித்தேன். விஜய் வெற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகைசெல்வனுடனான களம் 18 நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
2026 தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்? 1999ல் மாற்றத்திற்கான அரசியலை முன்வைத்து நீங்கள் முன்னெடுத்தது இப்போது நடந்துள்ளதா?
"இந்தத் தேர்தல் தமிழ்நாடு அரசியலில் வெகுவான மாற்றத்தை கொண்டுவரும் எனவும், புதிய அணி செயற்கை உருவாகும் எனவும் தேர்தல் முடிவுக்கு முந்தைய நேரலையில் பேசியிருந்தேன். விஜய், சிறுபான்மையினர்களின் வாக்கை கணிசமாக பிரிப்பார் என கணித்தேன். இதன் மூலம், திமுக கூட்டணி கட்சிகளின் மொத்த எண்ணிக்கையில் பெரும் சரிவை ஏற்படுத்தலாம், அதன் காரணமாக ஆட்சி அமைக்க தேவையான இடம் கிடைக்காமல்போகலாம் என யூகித்திருந்தேன். தொங்கு சட்டசபை வரும் என திருமாவளவன் நினைக்கிறாரா என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக, மதிமுக, தேமுதிக, நாதக ஆகிய கட்சிகள் முன்வைத்தன. திராவிட கட்சிகளுக்கு எதிரான இந்தத் தொடர் பிரச்சாரத்தின் காரணமாக திமுக, அதிமுகவுக்கு மாற்றான வாக்குச் சதவிகிதம் தொடர்ந்து கூடிக்கொண்டே வந்தது. இது விஜய்க்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாகவே அந்தக் கட்சிகள் 8% வாக்குகளை வாங்கின. இதனுடன் விஜய்க்கு சினிமா பிம்பம் இருப்பதால் 15 – 20% வாக்குகளை வாங்குவார் என்றும், அது ஒற்றை இலக்கு வெற்றியைத்தான் கொடுக்கும் என கணித்திருந்தேன்.
தற்போது சமூக ஊடக பயன்பாடு அதிகரித்திருப்பதால், பெரும்பாலும் அரசியலைப் பற்றி பேசுகிறார்கள். அதனால், வெறும் சினிமா பிம்பம் வைத்து வாக்கு செலுத்தமாட்டார்கள் என கணித்திருந்தேன். மேலும், தவெக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெல்லும் என நினைக்கவில்லை. எனவே இந்தத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
திமுக கூட்டணியின் மொத்த செயல்திட்டமும் பாஜகவை எதிர்த்தே கட்டமைக்கப்பட்டது. யாரும் விஜய்யை போட்டியாகவே பார்க்கவில்லை. ஆனால், விஜய், திமுகவை மட்டுமே குறிவைத்து பிரச்சாரம் செய்தார்.
சினிமாவில் வெறும் விஜய் என அடையாளப்படுத்தப்பட்டவர், அரசியலில் ஜோசப் விஜய் என அடையாளப்படுத்தப்பட்டார். இது கிறிஸ்துவ வாக்குகள் பெரிதாக அவர் பக்கம் சென்றுள்ளது. அனைத்துக் கட்சிகளுக்கு செல்லும் வாக்குகளை விஜய் எடுத்துள்ளார்.
அதிமுக ஆதரவைக் கொண்டு விஜய்யால் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், மதசார்பற்ற அரசை அமைக்க வேண்டும் என தவெக தரப்பில் இருந்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரியது. தற்போது அந்தப் பக்கம் விஜய் சென்றிருக்கிறார். ஆனால், எந்த அளவுக்கு போகும் எனத் தெரியவில்லை.
தேர்தல் முடிவுகள் வந்ததும் ஒரு கருத்தை உருவாக்கத்தை கொண்டுவந்தார்கள். அதிமுகவை விஜய் உடனடியாக எடுத்தால், அது பீ டீம் என அடையாளப்பட்டுவிடும். எனவே, திமுக கூட்டணி கட்சிகளை அவர் இழுத்து திமுகவை பலவீனப்படுத்துவார் என பலரும் பேசினார்கள். தேர்தலுக்கு முன்பாகவே இதன் காரணமாகத்தான் நாங்கள் திமுகவுடன் இருந்தோம்.
தவெகவை மாற்று சக்தியாகவும், வலதுசாரிகளுக்கு எதிரானவர்கள் எனும் கருத்தும் நமக்கு உருவாகவில்லை. சிறுபான்மையினர் வாக்குகளை மட்டுமே குறிவைத்து வருவதால், அதன்பின் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாஜக இருக்கலாம் என நான் யூகித்தேன். தற்போது, வலதுசாரிகளுக்கு வழிவிடும் களமாக மாறிவிட்டது” இவ்வாறு தெரிவித்தார்.
Exclusive | “தேர்தலுக்கு முன்பே தொங்கு சட்டசபையை கணித்தேன்… திமுகவுடன் நிற்க இதுவே காரணம்” – திருமாவளவன்
.png)








English (US) ·