Last Updated:Feb 26, 2026 9:57 PM IST
2026-ல் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1.15 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தேசத்தின் மொத்த நுகர்வில் தமிழகத்தின் பங்களிப்பு 30% ஆக உள்ளது. டாப் 5 மாவட்டங்களின் முழு விவரம் இங்கே.

2025-2026 காலப்பகுதியில் சர்வதேச பொருளதிகார நிச்சயமற்ற சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை லாபகரமானதாக பார்க்கின்ற்னர். தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 1.15 லட்சத்தைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உலக தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கையின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க நுகர்வில் சுமார் 28-30% பங்கினைத் தமிழ்நாடு மட்டுமே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. இருப்பினும், வலுவான பொருளாதாரக் கட்டமைப்பு கொண்ட நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினர் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்ற்னர். 2026ம் ஆண்டு நிதியாண்டு அறிக்கைகளின்படி, நகர்ப்புறங்களை விடத் தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களிலேயே (Tier-2 Cities) தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் டாப் 5 ‘தங்க’ மாவட்டங்கள்: முதல் இடத்தில் இருக்கும் சென்னையின் வருடாந்திர நுகர்வு மட்டும் 500 - 800 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியத் தொழில் கூட்டமைப்பு அறிக்கையின்படி, தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சென்னை பெரும் பங்களிப்பை வழங்குவதால், தனிநபர் வாங்கும் திறன் இங்கு மிக அதிகம்.மேலும், தெற்காசியாவின் மிகப்பெரிய நகை சந்தையான 'தி.நகர்' இங்கு அமைந்திருப்பது முக்கியக் காரணம்
இரண்டாம் இடத்தில் கோயமுத்தூர் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகரமும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சிறப்புடையதுமான, கோயம்புத்தூரின் வருடாந்திர நுகர்வு 300 முதல் 500 டன் என மதிப்பிடப்படுகிறது. கல்வி நிலையங்கள், தொழில் துறைகள், விவசாயம், பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வருகிறது. ஜவுளி, உதிரிபாகத் தொழிற்சாலைகளின் லாபத்தைத் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு இங்கு காணப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) வளர்ச்சி விகிதம் கோவையில் அதிகம் என்பதால், உபரி வருமானம் பெரும்பாலும் அசையாச் சொத்துகளுக்கு அடுத்தபடியாகத் தங்கத்திலேயே போடப்படுகிறது.
மூன்றாம் இடத்தில் மதுரை உள்ளது. ஆண்டிற்கு 250 முதல் 400 டன் வரை தங்கம் வாங்குவதாக கூறுகின்றனர். மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தென் மாவட்டங்களின் பொருளாதார கட்டமைப்பின் காரணமாகவும், கிராம சமூகக் கலாச்சாரத் தேவையின் காரணமாகவும் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
நான்காவது இடத்தில் திருநெல்வேலி உள்ளது. ஆற்றங்கரை விவசாயம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையின் வேலைவாய்ப்புகள் இங்குப் பணப்புழக்கத்தை அதிகரிக்கின்றன. இதன் வருடாந்திர நுகர்வு 200 - 300 டன் என மதிப்பிடப்படுகிறது. திருமணக் காலங்களில் பெண்களுக்கு வழங்கப்படும் சீர் வரிசைகளில் தங்கம் முக்கிய இடம் வகிப்பதால், நகைக்கடைகளின் அடர்த்தி இங்கு அதிகம்
ஐந்தாவது இடத்தில் கன்னியாகுமரி உள்ளது. ரப்பர் மற்றும் தென்னை விவசாயம் மூலம் நிலையான வருமானம். மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இம்மாவட்ட மக்களின் 'Remittance' எனப்படும் அந்நியப் பண வரவு தங்க விற்பனையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கேரள எல்லையை ஒட்டியுள்ளதால், இரு மாநில கலாச்சாரக் கலப்பு காரணமாக ஆபரணத் தங்கத்தின் மீதான மோகம் இங்கு அதிகம் என்று கருதப்படுகிறது

தந்தை தலையில் வெட்டிக் கொலை... உடல் அருகிலேயே படுத்து உறங்கிய மகன்...
திருப்பத்தூரில் மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தந்தையை கத்தியால் கொலை செய்து கைது
கொலை செய்த மகன் தந்தையின் உடல் அருகிலேயே அழுதபடி உறங்கினார்
பக்கத்து வீட்டுக்காரர்கள் சம்பவத்தை கண்டதும் பதறி போலீசாருக்கு தகவல் அளித்தனர்
.png)








English (US) ·