Last Updated:May 10, 2026 8:02 AM IST
நிலத்தகராறில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிலர் தாக்கி ஆபாசமாக பேசியதாக ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நிலத்தகராறில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிலர் தாக்கி ஆபாசமாக பேசியதாக ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜிபி முத்து. டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, ரியாலிட்டி ஷோ மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் நடைபெறும் கோயில் கட்டுமான பணியால் தனக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் ஜிபி முத்து அளித்த புகாரில் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சிலர் நுழைந்து தகராறு செய்ததாகவும், அதனைத் தட்டிக்கேட்டபோது, தன்னையும், குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ரத்தக் காயங்களுடன் ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Our GP Muthu & Daughters has been attacked by RSS
RSS has already grown depth in Tamilnadu under casteist DMK govt. Under TVK they will grow much more stronger. pic.twitter.com/25YjZT0Ewi
— prapa (@prapaarr) May 9, 2026
அதேநேரம் ஜிபி முத்து தாக்கியதாக அதேபகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
GP Muthu | ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல்… நடந்தது என்ன..? வீடியோ வெளியீடு!
.png)






English (US) ·