Guru-Chandra Conjunction: குரு - சந்திரன் கூட்டணியால் மெகா அதிர்ஷ்டம்! கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகும் 4 ராசிகள் எவை

31 minutes ago 14

Astrology: சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தால், 12 ராசிகளில் குறிப்பாக மிதுனம், சிம்மம், துலாம், மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம், மற்றும் தொழில் வெற்றி என அசுர வளர்ச்சி ஏற்படப் போகிறது.

2 Min read

Published : May 17 2026, 09:36 PM IST

15

கஜகேசரி ராஜயோகம்

Image Credit : Asianet News

கஜகேசரி ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் மிக உயரிய மற்றும் சக்திவாய்ந்த யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது 'கஜகேசரி ராஜயோகம்' ஆகும். தேவகுருவான வியாழனும், மனோகாரகனான சந்திரனும் இணையும் போது இந்த அற்புத யோகம் உண்டாகிறது. சந்திரன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மிதுன ராசியில் ஏற்கனவே குரு பகவான் வீற்றிருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் இந்த 'கஜகேசரி ராஜயோகம்' அதிகாரப்பூர்வமாக மலர்கிறது. இதன் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலித்தாலும், பின்வரும் 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டக் கதவுகள் அசுர வேகத்தில் திறக்கப் போகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

25

மிதுன ராசி (யோகம் நிகழும் சொந்த வீடு)

Image Credit : Pixabay

மிதுன ராசி (யோகம் நிகழும் சொந்த வீடு)

கஜகேசரி யோகம் உங்கள் சொந்த ராசியிலேயே உருவாவதால், நீங்கள்தான் இந்த காலகட்டத்தின் 'அதிர்ஷ்ட ராஜா. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த அரசு மற்றும் தனிப்பட்ட வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். நிதி நிலைமையில் அபார முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய வருமான வழிகள் பிறக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு (Promotion) அல்லது புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

35

சிம்ம ராசி (சமூக அந்தஸ்து உயரும்)

Image Credit : Pixabay

சிம்ம ராசி (சமூக அந்தஸ்து உயரும்)

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது தொழில் மற்றும் சமூகத்தில் உங்களது மதிப்பையும், மரியாதையும் பல மடங்கு உயர்த்தப் போகிறது. இதுவரை இருந்த தேக்க நிலை மாறி, முதலீடுகள் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற் அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் முழு ஆதரவோடு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

45

துலாம் ராசி (அதிர்ஷ்டம் அள்ளும்)

Image Credit : Pixabay

துலாம் ராசி (அதிர்ஷ்டம் அள்ளும்)

துலாம் ராசிக்காரர்களுக்குக் குரு மற்றும் சந்திரனின் ஆசி பூரணமாகக் கிடைப்பதால், தொட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றியாகும். பொருளாதார ரீதியாக மிகவும் வலுவான நிலையை அடைவீர்கள். கடன் தொல்லைகள் படிப்படியாகக் குறையும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த நேரம் ஒரு பொற்காலம் என்றே கூறலாம்; நினைத்த மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைப்பார்கள். வேலையில் புதிய வெற்றிகளும், பாராட்டுகளும் குவியும்.

55

கும்ப ராசி (திடீர் பண வரவு)

Image Credit : Pixabay

கும்ப ராசி (திடீர் பண வரவு)

கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த ராஜயோகம் பெரும் லாபத்தையும், நிம்மதியையும் அள்ளித் தரவுள்ளது. நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த குடும்பச் சண்டைகள், மனஸ்தாபங்கள் முடிவுக்கு வந்து அமைதி நிலவும். எதிர்பாராத இடத்திலிருந்து திடீர் பண வரவு (Sudden Windfall) உண்டாகும். ஆரோக்கியம் அசாத்திய முன்னேற்றம் அடையும். தொழில் செய்பவர்கள் தங்கள் துறையில் புதிய உச்சத்தைத் தொட்டு, லாபத்தை வாரிக்குவிப்பார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

Read Entire Article