நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு மகள் பிறந்த செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.
Published:3 mins agoUpdated:3 mins ago

தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதைத் தொடர்ந்து, அவர் நடித்த பியார் பிரேமா காதல், பார்க்கிங், லப்பர் பந்து, டீசல் போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2022-ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தன் எக்ஸ் பக்கத்தில், ``என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... எனக் குறிப்பிட்டு தனக்கு மகள் பிறந்த செய்தியை அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``எனது மனைவி நர்மதாவும் நானும் இன்று (02.03.2026) ஒரு பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும்போது, எங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
.png)





English (US) ·