Last Updated:Feb 22, 2026 7:48 PM IST
எல்லாம் சேர்ந்து ஒற்றுமையாக இருந்தோம் என்றால் யாரும் நம்மளை உடைக்க முடியாது. சின்ன திரைப்படங்கள் வாழ வேண்டும்.

விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளிவராமல் உள்ள நிலையில் அது குறித்து நடிகர் விஷால் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னை என்பது கோர்ட்டில் இருக்கிறது அதற்கு நடிகர் சங்கம் எப்படி குரல் கொடுக்க முடியும்? இதுபோன்ற தயாரிப்பாளர்களின் பிரச்சனைக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் சென்சார் போர்டு அலுவலகம் முன்பு சென்று நின்றார்கள் என்ன ஆகும் தெரியுமா?
ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எங்களை அணுகவில்லை. இந்த சங்கம் வலிமையாக பெரிய சக்தியாக இருந்தால் தமிழ் சினிமாவை மிகப்பெரிய இடத்திற்கு போகக்கூடிய விஷயமாக தயாரிப்பாளர் சங்கம் இருக்கும்.
இப்போது இருக்கிற தயாரிப்பாளர்கள், நலிவடைந்த தயாரிப்பாளர் என எல்லோரும் மறுபடியும் படம் எடுக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் செழிப்பாக இருக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை.
வெற்றி பெறக்கூடிய அணியினருக்கு என்னுடைய கோரிக்கை நாம் எல்லாம் சேர்ந்து ஒற்றுமையாக இருந்தோம் என்றால் யாரும் நம்மளை உடைக்க முடியாது. சின்ன திரைப்படங்கள் வாழ வேண்டும்.
தோற்ப்பவர்களையும் சேர்த்து, எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும். நான் ஓட்டு போட்டதே தமிழ் சினிமா நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தான்.
நான் தேர்தலில் போடியிடும் போது யாரும் நிற்கவில்லை. தற்போது சீனியர் தயாரிப்பாளர்கள், அறிவாளிகள் நிற்கிறார்கள் அவர்கள் நிற்கட்டும் என்று தெரிவித்தார்.
.png)






English (US) ·