Last Updated:May 13, 2026 5:52 PM IST
ரவி மோகன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆர்த்தி ரவி தாக்கல் செய்த மனு குறித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரவி மோகன். பல படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அடுத்து அவர் நடிப்பில் ‘கராத்தே பாபு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே, கடந்த ஆண்டு, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ரவி மோகன் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சிக்கு இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு, ஒரே நிற ஆடை அணிந்து கொண்டு கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், ஆர்த்தியை பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன், விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ரவி மோகனின் தோழியான பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கெனிஷாவின் அவதூறு கருத்துக்களால் ஆர்த்தி மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”சமூக வலைதளங்களில் பதியப்பட்டுள்ள அவதூறு கருத்துக்களை நீக்க உத்தரவிட வேண்டும்” என ஆர்த்தி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆர்த்தி ரவி மனுவுக்கு பதிலளிக்கும்படி கெனிஷாவுக்கு நீதிபதி என்.செந்தில் குமார் உத்தரவிட்டார். ஏற்கனவே போட்ட ட்வீட்களை நீக்கவும், ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன், படங்களை தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'ப்ரோ கோட்' மற்றும் 'ஆன் ஆன்ட்னரி மேன்' ஆகிய திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். இதைத் தவிர கராத்தே பாபு, ஜாம்பி மிருதன் 2 உள்ளிட்ட பல படங்களும் அவரின் கைவசம் உள்ளன.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அப்டேட்!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
.png)







English (US) ·