Jyeshtha Month: இந்து நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ஜ்யேஷ்ட மாதம், மே 22 முதல் ஜூன் 21 வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் உருவாகும் நல்ல யோகங்களால் ஐந்து ராசியினருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
2 Min read
Published : May 10 2026, 12:40 PM IST
16

Image Credit : Asianet News
ஜ்யேஷ்ட மாதம்
ஜ்யேஷ்ட மாதம் என்பது இந்து நாட்காட்டியின்படி மூன்றாவது மாதமாகும். இது பொதுவாக ஆங்கில மாதங்களான மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வரும். இந்த மாதத்தின் பௌர்ணமி அன்று சந்திரன் ஜ்யேஷ்டா (கேட்டை) நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இதற்கு 'ஜ்யேஷ்ட மாதம்' என்று பெயர் வந்தது. இந்நிலையில் ஜ்யேஷ்ட மாதம் மே 22 முதல் ஜூன் 21 வரை இந்த மாதம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரம் பல நல்ல யோகங்களை உருவாக்குகிறது. இதனால் சில ராசியினருக்குத் தொட்டதெல்லாம் துலங்கப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று பார்ப்போம்.
Add Asianetnews Tamil as a Preferred Source
26
Image Credit : Asianet News
மேஷ ராசி: தொழில் ஜாக்பாட்
மேஷ ராசியினருக்கு இது ஒரு வசந்த காலம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். குறிப்பாக தொழிலில் நீண்ட நாட்களாக வராத பணம் அல்லது நஷ்டம் அடைந்த தொகையை மீட்டெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பொருளாதார ரீதியாக நீங்கள் பலமடைவீர்கள்.
36
Image Credit : Asianet News
ரிஷப ராசி: இல்லத்தில் சுபகாரியம்
ரிஷப ராசியினருக்கு மகிழ்ச்சி பொங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது வருமான உயர்வு கிடைக்கலாம். திருமண முயற்சிகளில் இருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வரன் அமையும். பூர்வீக சொத்து தொடர்பான சிக்கல்கள் தீர்ந்து லாபம் தரும்.
46
Image Credit : Asianet News
சிம்ம ராசி: எதிரிகளை வெல்லும் காலம்
சிம்ம ராசியினருக்கு இது ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஜ்யேஷ்ட மாதத்தில் உங்கள் செல்வாக்கும் கௌரவமும் உயரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட எதிரிகள் இந்த பனிப்போரில் தோற்றுப்போவார்கள். உங்கள் இலக்குகளை மிக எளிதாக அடைவீர்கள்.
56
Image Credit : Asianet News
துலாம் ராசி: உறவுகளில் இனிமை
துலாம் ராசியினருக்குப் பணி மற்றும் குடும்ப வாழ்வு என இரண்டிலும் சமநிலையான வெற்றி கிடைக்கும். வேலையில் பெரிய மாற்றங்கள் அல்லது புதிய புராஜெக்ட்கள் கிடைக்கலாம். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்குத் திருமண யோகம் கூடி வரும் காலம் இது.
66
Image Credit : Asianet News
தனுசு ராசி: மாணவர்களுக்கு நற்செய்தி
தனுசு ராசியினருக்குப் பண வரவு சரளமாக இருக்கும். உங்களின் சேமிப்பு உயரும் வகையில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குறிப்பாக, மாணவர்கள் கல்வியில் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
.png)
3 hours ago
17






English (US) ·