MS Dhoni: சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி ஆட்டம்? சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

1 hour ago 8

MS Dhoni: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியில் தோனி இடம்பெறுவார். இதுதான் அவரது கடைசி ஆட்டமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

14

தடுமாறும் சிஎஸ்கே அணி

Image Credit : our own

தடுமாறும் சிஎஸ்கே அணி

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியின் நிலைமை மோசமாக உள்ளது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 வெற்றி மட்டுமே பெற்று 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமானால் மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக இருக்க வேண்டும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

24

சொந்த மண்ணில் நடக்கும் கடைசி போட்டி

Image Credit : Google

சொந்த மண்ணில் நடக்கும் கடைசி போட்டி

சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் மே 18 (திங்கட்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக மோதவுள்ளது. நடப்பு லீக் சுற்றில் சென்னை அணிக்கு இதுவே கடைசி ஹோம் மேட்ச் (சொந்த மண் போட்டி) ஆகும். சிஎஸ்கே ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி தசைநார் காயம் காரணமாக தோனி இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் சொந்த மண்ணில் கடைசியாக நடக்கும் போட்டியில் தோனி பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனியின் ஃபேர்வெல் மேட்ச்

இது தொடர்பாக குட்நியூஸ் சொல்லியுள்ள இந்திய முன்னாள் வீரழ்ர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், "கடந்த 2, 3 போட்டிகளாகவே தோனி களம் இறங்கத் தயாராக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி இந்த போட்டியில் தோற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே, சென்னை ரசிகர்களுக்கு மைதானத்தில் விடைபெறும் விதமாக தோனிக்கு ஒரு 'ஃபேர்வெல் மேட்ச்' (Farewell Game) வழங்க நிர்வாகம் திட்டமிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

34

தோனி சொன்னது என்ன?

Image Credit : Getty

தோனி சொன்னது என்ன?

கடந்த 2021-ஆம் ஆண்டு சிஎஸ்கே விழாவில் பேசிய தோனி, "என்னுடைய கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில்தான் இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் இந்த மே 18 போட்டி தான் தோனியின் கடைசி போட்டியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் தோனி வெறும் விடைபெறுவதற்காக மட்டும் அணியின் சமநிலையைக் கெடுத்துக்கொண்டு விளையாட மாட்டார் என்று சில கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

44

சிஎஸ்கேவின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி?

Image Credit : ANI

சிஎஸ்கேவின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி?

சிஎஸ்கேவின் பிளே-ஆஃப் வாய்ப்பு குறைவாக இருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''சில நேரங்களில் எதிரணி உங்களை விட சிறப்பாக விளையாடும், அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கடைசி இரண்டு போட்டிகளுக்குள் எங்கள் பேட்டிங் யூனிட் சிறப்பாக செட் ஆகி வருகிறது என்பது நம்பிக்கையளிக்கிறது. பந்துவீச்சில் இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாள். பிளேஆஃப் வாய்ப்புகள் குறித்து சிக்கலான விஷயம் எதுவும் இல்லை, எல்லாம் எளிதுதான். கவலைப்படத் தேவையில்லை, நாங்கள் ஒரு நல்ல நாளை உறுதி செய்து, நிலைமையை மாற்றுவோம் என்று நம்புகிறோம்" என்றார்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read Entire Article