NTK: "தேர்தல் அரசியலில்... இரண்டு கட்சிகளும் வெவ்வேறு அல்ல" - திருச்சி மாநாட்டில் சீமான் உரை

3 hours ago 17

'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி ஆலம்பட்டிபுத்தூர் பகுதியில் நடைபெறுகிறது.

234 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என ஆண் - பெண் சரிசம விகிதத்தில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என வேட்பாளர்கள் பெரும்பாலானோர் பட்டப்படிப்பை முடித்தவர்கள்

வேட்பாளர்கள் அறிமுக மாநாட்டில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``சாதிக்காக, சாமிக்காக, மதத்துக்காக கூடிய தமிழன் தன் மொழிக்காகக் கூடியிருப்பது இங்குதான்.

நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு

நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு

ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசைத் தீர்மானிப்பதுதான் அரசியல். அது ஒரு வாழ்வியல். ஆள்மாற்றம், ஆட்சி மாற்றமல்ல, ஆட்சி முறை மாற்றம் எங்கள் இலக்கு. அரசியல் என்பது இங்கு கட்சி அரசியல், தேர்தல் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. விளம்பர அரசியல் இருக்கிறதே தவிர மக்களுக்கான அரசியல் இல்லை.

பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, மது, மதப் போதை, இயற்கை வளக் கொள்ளை இல்லா நல்லாட்சி கொடுப்பதே எங்கள் கனவு. கல்வி, கல்விக்கேற்ற வேலை, அதற்கேற்ற ஊதியம் என்ற பெருமை மிகு வாழ்வை வழங்கும் ஆட்சியே எங்கள் இலக்கு. மொழி வளம், கலை, பண்பாடு ஆகிய எல்லாவற்றையும் காப்பது இது எல்லாம் சேர்ந்ததுதான் தமிழ்த் தேசிய அரசியல்.

ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து தனித்து நின்று, தோற்றும் வளர்ந்து வருகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இல்லை. இங்கு கூட்டணி என்பது சீட்டணி, நோட்டணியாக மாறிவிட்டது. ஒரு மொழி சிதைந்து அழிந்தால் அந்த இனத்தை எளிதாக அழித்துவிட முடியும்.

பயிற்று மொழி, பாட மொழியாகி, விருப்ப மொழியாகி சிதைந்துவிட்டது. தமிழன் ஆளும்போதுதான் தமிழ் மீட்சி ஏற்படும். அதற்காகத்தான் தொடர்ந்து பேசி வருகிறோம். அடுத்தவன் மொழி எப்படி அறிவாகும் என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை...

நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான்

நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான்

நாம் இவர்களைப் பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. நாம் செத்தாலும் பரவாயில்லை நம் இனம் வாழ வேண்டும் என்ற பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவர்கள். அதற்காகதான் அறிவாயுதம் ஏந்திக் களத்துக்கு வந்திருக்கிறோம். இந்தித் திணிப்பால் நம் பாட்டன்கள் உயிர் கொடுத்தார்கள். இன்றும் அந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே, வரலாறு தெரியாதவன் எழ வாய்ப்பில்லை. வரலாற்றைப் படிக்காதவன் வரலாற்றைப் படைக்க முடியாது.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களின் வரலாற்றை எழுதுவார்கள். நம்முடைய 5,000 ஆயிரம் ஆண்டின் அரசியல் வரலாறு என்ன... நமக்குத் தெரியுமா? ஆனால், திராவிட இனத்தின், ஈ.வெ.ரா தொடங்கி உதயநிதி வரைக்குமான 100 ஆண்டு அரசியல் வரலாறுதான் நம் வரலாறு எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

விழிப்புணர்வுதான் விடுதலையின் முதல் படி. அரிசி, பருப்பு, வேட்டி, சேலை எல்லாம் இலவசம். இலவசத்தில் இழக்கும் பணத்தை எங்கிருந்து எடுப்பார்கள் என்பதுதான் கேள்வி. தனியார் பள்ளி, கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனத் தனி தங்கும் விடுதி இல்லை. ஆனால், அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தனித் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது என்றால் இதில் யார் சமூக நீதியைக் காப்பது?

நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான்

நாம் தமிழர் கட்சி; திருச்சி மாநாடு - சீமான்

இந்தக் கடன் வாங்கி செய்யப்படும் செலவுக்கு மக்கள் வரியும், மண் வளமும்தான் அடகு வைக்கப்படுகிறது. அதிமுக - திமுக இரண்டும் தனித்தனிக் கட்சி என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி திருடுவது என்பதை ஒரே இடத்தில் கற்ற இரண்டும் ஒரே கட்சிதான். இந்த இரண்டு கட்சிக்கும் எந்த இடத்தில் வித்தியாசம் இருக்கிறது?

அதே போலதான், பா.ஜ.க - காங்கிரஸ் கட்சிகளும். இரண்டின் பொருளாதாரக் கொள்கை, பாதுகாப்புக்கொள்கை என எல்லாமே ஒன்றுதான். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் அந்தக் கட்சிகளுக்குப் பின்னால் நிற்கும். சட்டமன்றத் தேர்தல் என்றால் அந்த இரண்டு கட்சிகளும் இந்த இரண்டுக் கட்சிகளுக்குப் பின்னால் வரும். அவ்வளவுதான் இவர்களின் அரசியல்." எனப் பேசிக்கொண்டிருக்கிறார்...

மேலதிக தகவல்கள் இங்கு பதிவேற்றப்படும்...

Read Entire Article