Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் கில்லாடிகள்.. உங்க லவ்வுக்கு எண்ட் கார்டே இல்லை!

1 hour ago 11

Numerology: போரில் கூட வெற்றி பெற்று விடலாம். ஆனால் காதலில் வெற்றி பெறுவது கடினம். சில தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் கில்லாடிகள். அவை எந்தெந்த தேதிகள்? என எண்கணித அடிப்படையில் பார்ப்போம்.

2 Min read

Published : May 10 2026, 02:38 PM IST

15

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் கில்லாடிகள்

Image Credit : AI

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் கில்லாடிகள்

உலகில் காதலிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதை விட, தான் நேசித்தவர் இதயத்தில் இடம் பிடித்து காதலில் வெற்றி பெறுவதையே பலரும் பெரும் சாதனையாக கருதுகின்றனர். சிலர் வாழ்க்கையில் பள்ளி வயதிலேயே காதல் அரும்பாகி, கல்லூரியில் மொட்டாகி, வேலையில் சேர்ந்தவுடன் திருமணம் என்னும் பூவாக பூக்கத் தொடங்கி விடுகிறது. ஆனால் சிலர் வாழ்க்கையில் காதல் என்னும் செடி முளையிலேயே கருகி விடுகிறது.

எண்கணித சாஸ்திரப்படி (Numerology) ஒருவர் பிறந்த தேதியே அவருடைய குணாதிசயங்களையும், மற்றவர்களை ஈர்க்கும் திறனையும் தீர்மானிக்கிறது. அந்த வகையில், எந்த தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் அதிக வெற்றியை ஈட்டுகிறார்கள் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

25

 6, 15, 24 )

Image Credit : stockPhoto

காதல் மன்னர்கள் (தேதி: 6, 15, 24 )

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் காதல் மன்னர்கள் என எண்கணித சாஸ்திரம் சொல்கிறது. எண்கணிதப்படி 6-ம் எண்ணிற்கு அதிபதி சுக்கிரன் (Venus). காதலுக்கும், அழகுக்கும், கலைக்கும் அதிபதியான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக வசீகரமும், கனிவான பேச்சும் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒருவரை காதலிக்கத் தொடங்கினால், அவர்களைத் தன் அன்பால் கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர்கள். இவர்கள் காதலுக்கு எண்ட் கார்டே இல்லை. இவர்களது காதல் பெரும்பாலும் திருமணத்தில் முடிவதோடு, மகிழ்ச்சியான இல்லற வாழ்வையும் இவர்கள் பெறுவார்கள்.

35

 2, 11, 20, 29)

Image Credit : stockPhoto

உணர்வுப்பூர்வமான காதலர்கள் (தேதி: 2, 11, 20, 29)

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உணர்வுப்பூர்வமான காதலர்கள். சந்திரனின் ஆதிக்கம் கொண்ட 2-ம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த கற்பனைத் திறனும், மென்மையான குணமும் கொண்டவர்கள். இவர்கள் காதலில் விழுந்தால், தங்களது துணையை ஒரு குழந்தையைப் போலப் பராமரிப்பார்கள். இவர்களது கண்கள் பேசும் மொழியே இணையை எளிதில் கவர்ந்துவிடும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இவர்களிடம் அதிகம் என்பதால் இவர்களின் காதலில் விரிசல் வருவது கடினம். ஆகவே இவர்கள் காதல் கரையேற அதிக வாய்ப்புள்ளது.

45

 9, 18, 27)

Image Credit : Getty

தைரியமான காதலர்கள் (தேதி: 9, 18, 27)

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமான காதலர்கள் என எண்கணிதம் சொல்கிறது. செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட 9-ம் எண்ணில் பிறந்தவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். தான் விரும்பியவரை அடைவதற்காக போராடும் குணம் கொண்டவர்கள். இவர்களது காதல் மிகவும் தீவிரமாகவும், நேர்மையாகவும் இருக்கும். இவர்களது துணிச்சலான அணுகுமுறையே காதலில் வெற்றியை தேடிக்கொடுத்து கல்யாணத்தில் கொண்டு சேர்க்கும்.

55

மற்ற எண்களின் நிலை என்ன?

Image Credit : Getty

மற்ற எண்களின் நிலை என்ன?

இதேபோல் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தால் காதலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். தலைமைப் பண்பு அதிகம் என்பதால், துணையை கஷ்ட காலங்களிலும் தாங்கி பிடித்து செல்வார்கள். 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதன் வசீகரத்தால் தங்கள் சாமர்த்தியமான பேச்சாற்றலால் காதலை வென்று விடுவார்கள். ஜாலியாக இருக்கும் இவர்களுடன் பழகுவது எப்போதும் உற்சாகமாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எண்கணித சாஸ்திரம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை மட்டுமே ஆகும். காதலில் வெற்றி தோல்வி என்பது இரண்டு நபர்களின் புரிதல், மரியாதை மற்றும் பரஸ்பர அன்பைப் பொறுத்தே அமையும் தவிர, அது எண்களை மட்டும் சார்ந்தது அல்ல. இந்த செய்தி தொகுப்பு எண்கணித அடிப்படையில் ஒரு சுவாரஸ்யமான தகவலாக மட்டுமே கொடுக்கப்படுகிறது.

Read Entire Article