Last Updated:May 16, 2026 9:40 PM IST
OTT Spot | ஓடிடியில் காணக்கிடைக்கும் இந்தப் படம் 18 + வயது வந்தோருக்கான த்ரில்லர் திரைப்படம். வீக் எண்ட்டுக்கான திரை விருந்து.

வார இறுதியில் த்ரில்லரான படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம். ஆனால், இந்தப் படத்தை குடும்பத்துடன் இணைந்து பார்ப்பதில் தயக்கங்கள் எழலாம். ஓடிடியில் 18+ வயது வந்தோருக்கான ஒரு படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சில இடங்களில் ஆபாச காட்சிகள் இருந்தாலும், அதை கடந்து தரமான த்ரில்லர் கதை தான் இது.
திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் பெண் ஒருவர். படுத்த படுக்கையாக இருக்கும் தனது மாமியாரை, ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்றுவிடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் சம்பவம். ஒரு வீட்டில் இருட்டறையில் நடக்கும் இந்த படம் பலருக்கும் தெரியாம மலையாள த்ரில்லர் ட்ராமா. மலையாளத்தில் வெளியான ‘உடல்’ (Udal) படம் தான் அது. அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.
பார்வைத்திறன் - செவித்திறன் குறைபாடு கொண்ட மாமனார். இவரது மருமகளுக்கு மாமியாரைப் பார்த்துக் கொள்வதில் சலிப்பு. இதனால் ஒருவித வெறுப்பாகவே இருக்கிறார். மருமகள் திருமணத்தை மீறிய உறவில் ஒருவருடன் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருடன் சேர்ந்து மாமியாரைக் கொலை செய்துவிடுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் ‘உடல்’ திரைப்படம்.
பெரிய அளவில் எந்த பொருட்செலவும் இல்லாமல், ஒரு வீட்டில் இருட்டில் நடக்கும் சம்பவங்கள் தான் மொத்த திரைப்படமும். காட்சிக்கு காட்சி நடக்கும் சம்பவங்களும், இடைவேளைக்குப் பிறகு நிகழும் திக் திக் நிமிடங்களும் நம்மை திரையிலிருந்து அகலவிடாது. அந்த அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதை நம்மை கட்டிப்போடும். குறிப்பாக இடைவேளைக் காட்சி காண்போரை பதறவைக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
ஹாரர் திரைப்படம் இல்லை என்றாலும், அதற்கான பதைபதைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. படத்தின் க்ளைமாக்ஸ் அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கும். யார் சரி..? யார் தவறு? என்பதை தாண்டி பழிவாங்கும் கதை.
முதல் பாதி கொலை. இரண்டாம் பாதி கொலைக்கான பழிவாங்கும் படலம். செவித்திறன், பார்வை குறைபாடு கொண்ட மாமனார் எப்படி பழிவாங்குகிறார் என்பதை அட்டகாசமாக காட்சிபடுத்தியிருப்பார்கள். இறுதியை நெருங்குவதற்கு முன்பு வரை சுவாரஸ்ய திரைக்கதை சீட் நுனியில் உட்கார வைக்கும்.
பின்னணி இசையும், கேமராவும் படத்தின் திக் திக் நிமிடங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 2-ம் பாதி முழுவதும் இருட்டிலேயே எடுக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களுக்கு திகிலைக் கொடுக்கத் தவறவில்லை. வன்முறைக் காட்சிகள் அதிகம். வயது வந்தோருக்கான திரைப்படம்.இந்தப் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

"பயங்கரவாதிகளை தூண்டினால்.." - இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!
பயங்கரவாதிகளை தூண்டினால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இல்லாமல் போகலாம்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தால் இந்திய ராணுவம் பதிலடி.
2023 மே 7 பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி.
.png)








English (US) ·