Panchaka Kalam: ரோக பஞ்சக காலம் ஆரம்பம்.! இந்த 7 ராசிக்காரங்க அடுத்த 5 நாளைக்கு ரொம்ப உஷாரா இருக்கணும்.!

2 hours ago 12

ஜோதிட சாஸ்திரப்படி, மே 10-ம் தேதி முதல் ரோக பஞ்சக காலம் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் 7 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த 3 ராசிகள் எவை என தெரிந்துகொள்ளுங்கள். 

2 Min read

Published : May 10 2026, 01:50 PM IST

19

Roga Panchaka Kalam

Image Credit : chat gpt

Roga Panchaka Kalam

இந்து மதத்தில் பஞ்சக காலத்தை ஒரு அசுப நேரமாகக் கருதுகின்றனர். இந்த நேரத்தில் சுப காரியங்கள் செய்வதில்லை. மே 10, ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால், இதை 'ரோக பஞ்சகம்' என்கிறார்கள். இந்த காலமானது சில ராசியில் பிறந்தவர்களுக்கு அசுப பலன்களைத் தரக்கூடும். குறிப்பாக 7 ராசிக்காரர்கள் அடுத்த 5 நாட்களுக்கு உஷாராக இருக்க வேண்டும். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

29

ரிஷபம்

Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் ரோக பஞ்சக காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரமாக வையுங்கள். பயணத்தின்போது திருட்டுப் போக வாய்ப்புள்ளது. உடல்நலக் குறைவால் மருந்துகளுக்கு அதிகம் செலவு செய்ய நேரிடலாம்.

39

மிதுனம்

Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசியினருக்கு கிரக மாற்றங்கள் ஏற்படுவதால், உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக செரிமானம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது.

49

கடகம்

Image Credit : Asianet News

கடகம்

இந்த காலத்தில் கடக ராசியினருக்கு மன அழுத்தம் மற்றும் சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. வாகனங்களில் செல்லும்போது வேகம் வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவது அவசியம்.

59

கன்னி

Image Credit : Asianet News

கன்னி

மே 10 முதல் தொடங்கும் இந்த 5 நாட்கள் கன்னி ராசிக்கு அசுப பலன்களைத் தரும். விலை உயர்ந்த பொருட்கள் திருடு போகலாம். நெருங்கியவர்களே திருட வாய்ப்புள்ளது. பயணத்தின்போது மொபைல், லேப்டாப், நகைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

69

விருச்சிகம்

Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு பண விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவச் செலவுகள் திடீரென வரலாம் என்பதால் திட்டமிட்டு செலவு செய்யவும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் தேவை, இல்லையெனில் தேவையற்ற மனக்கசப்புகள் உண்டாகலாம்.

79

தனுசு

Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் உஷ்ணம் மற்றும் கண் எரிச்சல் போன்ற உபாதைகள் வரலாம். வேலையில் அதிக அழுத்தம் காரணமாக சோர்வு ஏற்படக்கூடும். போதுமான ஓய்வு எடுப்பது அவசியம்.

89

மகரம்

Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்கள் ரோக பஞ்சக காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது. உங்கள் உடைமைகள் மற்றும் பொருட்களை இழக்க நேரிடலாம். பயணங்களிலும் அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

99

Image Credit : AI Generated

ரோக பஞ்சக காலத்தில் செய்ய வேண்டியவை:

தன்வந்திரி வழிபாடு: ஆரோக்கியம் மேம்பட தன்வந்திரி பகவானை வழிபடுவது சிறப்பு.

ஆதித்ய ஹிருதயம்: தினமும் ஆதித்ய ஹிருதயம் கேட்பது அல்லது பாராயணம் செய்வது உடல் பலத்தை அதிகரிக்கும்.

தானம்: இயலாதவர்களுக்கு மருத்துவ உதவி அல்லது அன்னதானம் செய்வது தோஷங்களை குறைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read Entire Article