Radhan Pandit : இப்போ முதல்வர்.. அடுத்து பிரதமர்.. ரஷ்யா பிரச்சினையை விஜய் தீர்த்து வைப்பார்.. ஜோதிடர் பேச்சு

56 minutes ago 9

நடிகரும், முதலமைச்சருமான விஜய் எதிர்காலத்தில் உலக அரசியலில் முக்கிய பங்கு வகித்து, அமெரிக்க-ரஷ்ய பிரச்சினைகளைத் தீர்ப்பார் என ராதன் பண்டிட் வெற்றிவேல் கூறியுள்ளார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read

Published : May 15 2026, 09:10 PM IST

14

விஜய் குறித்து ராதன் பண்டிட்

Image Credit : Asianet News

விஜய் குறித்து ராதன் பண்டிட்

ராதன் பண்டிட் வெற்றிவேல் (Radhan Pandit Vetrivel) தெரிவித்த ஒரு கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ட்ரோல்களையும் கிளப்பியுள்ளது. நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய் எதிர்காலத்தில் உலக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார் என்றும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணக்கூடிய தலைவராக உயர்வார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கருத்து வைரலானதுடன், இணையத்தில் பலரும் இதை நகைச்சுவையாகவும், சிலர் கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

24

ராதன் பண்டிட் வெற்றிவேல் பேட்டி

Image Credit : Asianet News

ராதன் பண்டிட் வெற்றிவேல் பேட்டி

ராதன் பண்டிட் வெற்றிவேல் சமீபத்தில் அரசு பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின்னர் பொதுமக்கள் எதிர்ப்பால் 24 மணி நேரத்திற்குள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ராதன் பண்டிட் தனது கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்திய ஒரு பேட்டியில், “முதலமைச்சர் பதவி விஜய்க்கு சிறிய விஷயம். அவர் முதலில் தமிழகத்தை வழிநடத்துவார். அதன் பிறகு டெல்லி அரசியலுக்கும் செல்வார். இறுதியில் உலகளாவிய தலைவராக உயர்வார்” என்று கூறியுள்ளார்.

34

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினை

Image Credit : Asianet News

அமெரிக்கா - ரஷ்யா பிரச்சினை

மேலும், “அமெரிக்க அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர் இடையே பிரச்சினை ஏற்பட்டால், விஜய் அதை பேசி தீர்த்து வைப்பார்” என்றும் தெரிவித்தார். இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, பலரும் நையாண்டி கருத்துக்களை பதிவிட தொடங்கினர். சிலர், “இது அரசியல் கனிப்பா அல்லது சினிமா கதையா?” என்று கேள்வி எழுப்பினர். மற்றொருவர், “அமெரிக்க படம் ரீமேக் செய்து ரஷ்ய மொழியில் டப் பண்ணி பிரச்சினையை தீர்ப்பாரோ?” என்று கிண்டலடித்தார்.

44

ஜோதிடர் கூறிய கருத்து வைரல்

Image Credit : ANI

ஜோதிடர் கூறிய கருத்து வைரல்

மேலும் சிலர், இப்படியான கருத்து இமேஜுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும், அதிகாரப்பூர்வ பேச்சாளர்கள் மட்டுமே ஊடகங்களில் பேச வேண்டும் என்றும் கருத்துகள் அரசியல். மேலும் ராதன் பண்டிட் வெற்றிவேல் முன்னதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவரது கருத்துக்கள் எப்போதும் கவனத்தை ஈர்த்து வந்துள்ளன.

Read Entire Article