Last Updated:May 10, 2026 7:19 AM IST
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மதுரை, சிவகாசி, கோவை, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று கோடை மழை கொட்டித்தீர்த்தது. இன்றும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். அப்போது, மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வரும் 14-ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும்.” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)







English (US) ·