
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2025 - 2026-ம் கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கை சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் ஆரம்ப வகுப்பில் குழந்தைகள் சேர்வதற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதில் விண்ணப்பிக்கும் ஆதரவற்ற குழந்தைகள், பிற பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை அக்டோபர் 17-ம் தேதி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நடைபெற உள்ளது. முகாமில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் ஒதுக்கீட்டை விட அதிகமானால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முற்றிலும் கிடையாது. இதற்கு முன் கல்வியாண்டில் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் 7 நாட்களுக்குள் பெற்றோர்களுக்கு திருப்பி செலுத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி முகாம்களுக்கு சென்று இலவச கல்வி பயில பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் காலோன் தெரிவித்துள்ளார்.