Last Updated:May 17, 2026 7:55 PM IST
இந்த நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) உலகளாவிய அறிக்கையின்படி, உலகில் வெள்ளியை அதிகம் இருப்பு வைத்த நாடுகளின் விபரங்கள் வெளிவந்துள்ளன

உலக அளவில் வெள்ளியை அதிகம் இருப்பு வைத்துள்ள நாடுகள் குறித்து பார்க்கலாம். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் (DGFT) வெள்ளி இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இதுவரை 'சுதந்திரமான' (Free) பிரிவில் தங்கு தடையின்றி இறக்குமதி செய்யப்பட்டு வந்த சில குறிப்பிட்ட வெள்ளி தயாரிப்புகள், இனி 'கட்டுப்படுத்தப்பட்ட' (Restricted) பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் வெள்ளிக்கான உள்நாட்டுத் தேவையும், தொழில்துறை பயன்பாடுகளும் மிக அதிகமாக உள்ள நிலையில், அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) உலகளாவிய அறிக்கையின்படி, உலகில் வெள்ளியை அதிகம் இருப்பு வைத்த நாடுகளின் விபரங்கள் வெளிவந்துள்ளன. தென் அமெரிக்க நாடான பெரு உலகிலேயே மிக அதிகபட்சமாக சுமார் 1,40,000 மெட்ரிக் டன் வெள்ளி இருப்புடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா சுமார் 94,000 மெட்ரிக் டன் இருப்புடன் இரண்டாம் இடத்திலும், ரஷ்யா 92,000 மெட்ரிக் டன் இருப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சீனா (70,000 மெட்ரிக் டன்), போலந்து (61,000 மெட்ரிக் டன்), மெக்சிகோ (37,000 மெட்ரிக் டன்), சிலி (26,000 மெட்ரிக் டன்), அமெரிக்கா (23,000 மெட்ரிக் டன்) மற்றும் பொலிவியா (22,000 மெட்ரிக் டன்) ஆகிய நாடுகள் உள்ளன.
உலகளாவிய இந்தப்பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 8,000 மெட்ரிக் டன் வெள்ளி இருப்பு மட்டுமே உள்ளது.
உலகிலேயே வெள்ளியை மிக அதிகமாகப் பயன்படுத்தும் நுகர்வோர் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வெள்ளி ஆண்டு உள்நாட்டுத் தேவை சுமார் 6,000 முதல் 7,000 டன்களாக உள்ளது. ஆனால், இங்கு இருப்பு குறைவாக இருப்பதால், தேவையில் 80 முதல் 90 சதவீதப் பகுதியை பிரிட்டன், ஹாங்காங் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது.

"பயங்கரவாதிகளை தூண்டினால்.." - இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!
பயங்கரவாதிகளை தூண்டினால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இல்லாமல் போகலாம்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தால் இந்திய ராணுவம் பதிலடி.
2023 மே 7 பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி.
.png)








English (US) ·