ஒரு வாக்காளர் தனது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்?
வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்குச்சாவடி அமைவிடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும்.
இதுதவிர www.elections.tn.gov.in என்ற இணையதளம், இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் நீக்கப்பட்டவர்கள் விவரங்கள் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையப்பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் அவர் என்ன செய்ய வேண்டும்?
விடுபட்ட நபர், தனது பெயரை சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 18-ஆம் தேதி வரை படிவம் 6-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம்-6 ஐ சம்பந்தப்பட்ட BLO, வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரின் அலுவலகங்களிலிருந்து பெறலாம்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி அல்லது வாக்காளர் சேவை இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
படிவம் 6-ஐ யார் யார் சமர்ப்பிக்கலாம்?
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத தகுதியுள்ள வாக்காளரும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், உறுதிமொழி படிவத்துடன் படிவம்-6 ஐ சமர்ப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, 17.02.2026 அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும்.
வாக்காளர் விவரங்களை சரிபார்க்க ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் எவை?
மத்திய, மாநில நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை/ ஓய்வூதிய ஆணை.
01.07.1987 க்கு முன்னர் இந்தியா பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை
தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
பாஸ்போர்ட்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் சான்றிதழ்
மாநில அரசு வழங்கிய நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்
வன உரிமைச் சான்றிதழ்
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்
ஆதார் அட்டை
பிகார் சிறப்புத் தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் நகல்.
பட்டியலிடப்பட்ட எந்த ஆவணமும் வாக்காளரிடம் இல்லையெனில் என்ன நடக்கும்?
BLO மேற்கொள்ளும் கள விசாரணையின் அடிப்படையில், அவ்வாக்காளர்களின் பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோர் தீர்மானிப்பார்கள்.
நான் ஒரு புதிய வாக்காளர்; 2026-ஆம் ஆண்டில் 18 வயதை நிறைவு செய்ய உள்ளேன். எதிர்கால தகுதி தேதிகளில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாமா?
2026 ஆம் ஆண்டின் தகுதி தேதிகளான ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 18 வயதை நிறைவு செய்யும் புதிய வாக்காளர்கள், உறுதிமொழி படிவத்துடன் படிவம்-6ஐ சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
படிவம் 7-ஐ யார் சமர்ப்பிக்கலாம்?
சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளராலும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
படிவம் 8-ஐ யார் சமர்ப்பிக்கலாம்?
முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்தல் / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றுதல் / மாற்றுத்திறனாளி எனக் குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம் 8-ஐ சமர்ப்பிக்கலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026 அன்று வெளியிடப்படும்.
ஆமாம். வாக்காளர் பதிவு அலுவலரின் எந்தவொரு முடிவின் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் (பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர்கள்) மேல்முறையீடு செய்யலாம்.
தீர்வு கிடைக்கவில்லை எனில் இரண்டாவது முறையாக மாநில
தலைமை தேர்தல் அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம்.
First Published :
Dec 21, 2025 11:44 AM IST
.png)




English (US) ·