Siragadikka Aasai 1000 Episode Record : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை ரீச் பண்ணி சாதனை படைத்துள்ளது.
2 Min read
Published : May 09 2026, 10:21 AM IST
15

Image Credit : instagram
1000 Episode Crossed Vijay TV Serials
முன்பெல்லாம் சீரியல்கள் அசால்டாக ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். ஆனால் தற்போது போட்டிகள் அதிகரித்துவிட்டதால், சீரியல்கள் ஒரு ஆண்டு தாக்குப்பிடிப்பதே சவாலான விஷயமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி டிஆர்பி கிடைக்கவில்லை என்றால் தொடங்கிய சில மாதங்களிலேயே சில சீரியல்களை இழுத்து மூடும் சூழலும் உருவாகிறது. அதற்கு மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக ஆயிரமாவது எபிசோடை எட்டி சாதனை படைத்துள்ளது. அந்த சீரியலின் இந்த மைல்கல் சாதனைக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்.
Add Asianetnews Tamil as a Preferred Source
25
Image Credit : jiohotstar
1000 எபிசோடுகளை எட்டிய சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கதைக்களம் மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் தான். குறிப்பாக இந்த தொடரின் ஹீரோ, ஹீரோயினான முத்து மற்றும் மீனா இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மற்ற சீரியல்களை போல் குறிப்பிட்ட சில கேரக்டர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த தொடரில் உள்ள எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதேபோல் கதைக்களத்தில் ட்விஸ்டுக்கும் பஞ்சமில்லாததால், ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். சிறகடிக்க ஆசை சீரியலை போல் 1000 எபிசோடு கடந்து ஒளிபரப்பான சில சீரியல்களும் விஜய் டிவியில் உள்ளன.
35
Image Credit : jiohotstar
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இதன் முதல் சீசன், கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2023-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த சீரியல் 1348 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முடிவடைந்த உடனேயே அதன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப தொடங்கினர். தற்போது அந்த சீரியலும் டிஆர்பியில் சக்கைப் போடு போட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
45
Image Credit : our own
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான மற்றொரு சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியல் 1036 எபிசோடுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷினி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்தவுடன் அதன் இரண்டாம் பாகத்தை தொடங்கினார். ஆனால் அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், 133 எபிசோடுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
55
Image Credit : x/vijaytelevision
பாக்கியலட்சுமி
விஜய் டிவி ஒளிபரப்பிய மற்றுமொரு சூப்பர் ஹிட் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் 2025-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. விஜய் டிவி வரலாற்றில் அதிக எபிசோடுகள் ஓடிய சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியல் ஒட்டுமொத்தமாக 1469 எபிசோடுகள் ஒளிபரப்பாகியது. இந்த சீரியலின் சாதனையை சிறகடிக்க ஆசை சீரியல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
.png)
1 hour ago
10







English (US) ·