Last Updated:May 09, 2026 10:00 AM IST
Siragadikka Aasai | சிறகடிக்க ஆசை சீரியலில் தனியாக இருக்கும் மனோஜின் மனசை மாற்ற ரோகிணி புது வித முயற்சியில் ஈடுபடுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவும் மீனாவும் ஸ்ருதி ஹோட்டலுக்கு வருகின்றனர். அம்மாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு ஒகே வா இருக்கிறதா என்று கேட்கிறார். ரவியும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல, இல்ல அம்மாவுக்கு கஷ்டமா தான் இருக்கும் என்று முத்து சொல்கிறார்.
பிறகு பேசாமல் அம்மாவை டூருக்கு அனுப்பிவிடலாமா என்று யோசிக்கிறார். அந்த நேரத்தில் ஸ்வேதா வரவே தன்னிடம் ரூ.5 லட்சம் இருப்பதாகவும் அதை கடன் அடைக்க எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். மேலும் விஜயாவையும் - அண்ணாமலையும் எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய் வச்சிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு முத்துவோ அளவுக்கடந்த பாசத்திற்கு நன்றி சொல்லி முடிவு பண்ணலாம் என்று சொல்கிறார். காசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கடனை அடைக்க வேறு கடன் வாங்கலாம் என்று யோசிக்கிறார்.
மறுபுறம் சிந்தாமணியை சந்திக்க அவரது கணவர் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் என்ன விஷயம் என சிந்தாமணி கேட்க, அவரோ ஹைதராபாத்தில் உள்ள ரேகா திரும்பவும் சென்னைக்கு வர உள்ளதாக சிந்தாமணியிடம் கூறுகிறார். அவளுக்கு மட்டும் நாம் வேண்டும் என்று அவளை அங்கு அனுப்பி வைத்த விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான் என சிந்தாமணியின் கணவர் சொல்ல, அவளை இங்கு வரவிடாமல் தடுக்க என்னிடம் ஒரு நல்ல பிளான் இருக்கிறது என கூறுகிறார் சிந்தாமணி. அது என்ன பிளான் என்பது பற்றி பேச தன் கணவரை உள்ளே அழைத்துச் செல்கிறார். அந்த பிளான் பற்றி சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.
தொடர்ந்து ஷோருமிற்கு சென்ற ரோகிணி மனோஜிடம் என்ன நடந்தது என்று போட்டு வாங்குகிறார். உடனே அவர் வீடு இன்றி தவிப்பதை சாதகமாக பயன்படுத்தி நீ என் வீட்டிற்கு வந்திருக்கலாமே ஏன் இப்படி எலிகிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுற என்று கேட்கிறார். ஐயோ அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் என பயப்படுகிறார். பிறகு எலியை எல்லாம் ஈஸியா விரட்டிடலாம் என்று ரோகிணி சொல்ல நீ ஒரு நாள் இங்க தங்கி பாரு அப்போ தெரியும் என்று சொல்கிறார் மனோஜ்.
உடனே இதை சாதகமாக்கி கொண்ட ரோகிணி மனோஜுடன் இன்று ஷோரூமில் இரவு தங்க சம்மதிக்கிறார். எப்படியாவது எலியை விரட்டி விடலாம் என்று சொல்கிறார். இதை புரியாத மனோஜும் ரோகிணியை உடன் இருப்பதற்கு சந்தோஷம் கொள்கிறார். இது விஜயாவிற்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
பிறகு சுருதி வீட்டு மாடிக்கு விஜயா சென்றபோது அங்கு சுருதியின் அம்மா ரூமை பூட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர் விஜயாவிடம் தான் வெளியே செல்ல இருப்பதாகவும் வீட்டைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு செல்கிறார். தான் இருக்கும்போது வீட்டு அறையின் கதவை சுருதி அம்மா பூட்டி சென்றதால் கடும் அப்செட் ஆன விஜயா, தன்னுடைய தோழி பார்வதிக்கு போன் போட்டு பேசுகிறார்.
அவரிடம் நான் இப்போ எங்கே இருக்கிறேன் தெரியுமா என கேட்க, அவரும் நீ உன்னோட வசதியான சம்மந்தி வீட்ல இருக்குற என்று தெரியும் என கூறுகிறார். எல்லா பிரச்சனையும் தெரிஞ்சும் எனக்கு நீ போன் பண்ணவே இல்ல என பார்வதி இடம் சண்டை போடுகிறார் விஜயா.
அதுமட்டுமின்றி தனக்கு இங்கு இருக்க பிடிக்கவே இல்லை நான் கிளம்பி உன் வீட்டுக்கு வர போகிறேன் என சொல்கிறார் விஜயா. அதற்கு யோசிக்கும் பார்வதி, நீ மட்டும் இங்கு வந்தால் சரியா இருக்காது. நீ உன்னுடைய கணவர் அண்ணாமலையுடன் இங்கு வந்து தாராளமாக தங்கிக் கொள்ளலாம். ஆனால் தனியா வந்து தங்க வேண்டாம் என கூறிவிடுகிறார் பார்வதி. இதனால் மேலும் கோபமடைந்த விஜயா, என்னையே வர வேண்டாம்னு சொல்லிட்ட இல்ல என கோபப்பட்டு போனை கட் பண்ணி விடுகிறார். இதை அடுத்து என்னானது? ஸ்ருதி வீட்டில் விஜயாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி என்ன? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

SSY Scheme | ரூ.410 போதும்.. கைக்கு ரூ.71 லட்சம் வரும்!
தினமும் ரூ.410 சேமித்தால் 21 ஆண்டில் ரூ.71.82 லட்சம் கிடைக்கும்.
ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது; வரிவிலக்கும் உண்டு.
10 வயதுக்குள் கணக்கு தொடங்கி, கல்வி, திருமண செலவுக்கு பயன்படுத்தலாம்.
.png)




English (US) ·