Last Updated:May 16, 2026 9:50 AM IST
Siragadikka Aasai | சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகிணி மனோஜை அவரது வீட்டிற்கு எதிராகவே டியூன் செய்கிறார். இது விஜயாவுக்கு தெரியவர அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் வீட்டிற்கு வந்த விஜயாவிடம் மீனாவின் அம்மா, காலை டிபனுக்கு பூரி செய்யவா என கேட்க, அதற்கு அவர் நீங்க பழைய எண்ணெய்யை யூஸ் பண்ணுவீங்களா, அது எனக்கு ஒத்துக்காது என சொல்கிறார் விஜயா. அதற்கு அவர் புது எண்ணெய் தான் சம்மந்தி என சொல்லி பூரி செய்து கொடுக்கிறார். விஜயாவுக்கு கீழே உட்கார்ந்து சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் அவருக்காக பக்கத்து வீட்டில் இருந்து டைனிங் டேபிள் வாங்கி வந்து போடுகிறார் சத்யா. இப்படி அவருக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். ஆனால் அவரோ நன்றியுணர்வே இல்லாமல் இருக்கிறார்.
முத்து, அண்ணாமலையிடம் தனக்கு ஸ்போகன் இங்கிலீஷ் கிளாசில் ஒரு நண்பர் கிடைத்திருப்பதாகவும், அவர் வருமான வரித்துறையில் வேலை செய்வதாகவும், அவரிடம் நம்முடைய வீட்டு பிரச்சனையை சொன்னபோது, அவர் பைனான்சியரை சந்தித்து இந்த பிரச்சனையை முடித்து தருவதாக சொல்லி இருக்கிறார் என சொல்ல, அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். அதுமட்டுமின்றி அந்த பைனான்சியரிடம் வருமான வரித்துறை அதிகாரியுடன் சென்று மனோஜ் வாங்கிய 48 லட்சம் ரூபாய் கடனுக்கான ஆதாரத்தை கேட்க இருப்பதாக சொல்கிறார் முத்து.
மறுபுறம் மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி வருகிறார். அவர் வந்ததும் மனோஜிடம் ஆண்ட்டி எங்க என கேட்க, அவரோ அப்பா வந்து அம்மாவை அழைச்சிட்டு போயிட்டாங்க. இப்போ அவங்க மீனா வீட்டுல இருக்காங்க என சொல்கிறார். அதற்கு ரோகிணி, பார்த்தியா மனோஜ், கொஞ்ச நாள் கூட அங்கிளால ஆண்டியை பிரிஞ்சி இருக்க முடியல, அதேபோல தான் என்னாலையும் உன்னை பிரிந்து இருக்க முடியவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து மனோஜின் டைவர்ஸ் கேஸை நடத்தும் வக்கீல் அங்கு வருகிறார். அவர் மனோஜையும் ரோகிணியையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு மனோஜிடம் ஏசி வாங்கும் போது என்ன ஒன்னு சேர்ந்துட்டீங்க போல என நக்கலாக கேட்கிறார். அதற்கு மனோஜ் இல்லை என சொல்லவே அது உங்க பர்ஷனல் எப்படியோ ஒரு முடிவை எடுத்துட்டு சொல்லுங்க என கூறிவிட்டு செல்கிறார்.
பின்னர் மனோஜை தனியாக அழைத்து பேசும் வக்கீல், என்ன மனோஜ் ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்களா என கேட்கிறார். அதற்கு அவர் இல்லை மேடம் என சொல்லி மழுப்புகிறார். பின்னர் அங்கிருந்து செல்லும் வக்கீல், விஜயாவுக்கு போன் போட்டு பேசுகிறார். அவரிடம் என்ன மேடம் உங்க பையனோட டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிடலாமா என கேட்கிறார்.
எதுக்கு என விஜயா கேட்டதும், மனோஜ், ரோகிணி இருவரும் ஜோடியாக ஷோரூமில் இருந்ததை பற்றி சொல்கிறார் வக்கீல். இதனால் செம டென்ஷன் ஆகிறார் விஜயா. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா?
தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்ந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.
மேற்காசிய போர் காரணமாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு.
தங்கம் விலை உயர்வு நகை சந்தையில் மந்தநிலையை உருவாக்கி உள்ளது.
.png)








English (US) ·