Skincare: உங்கள் நைட் கிரீம் அதிக அடர்த்தியாக உள்ளதா? தோல் மருத்துவமின் முக்கிய விளக்கம்!

3 hours ago 8

அடர்த்தியான மற்றும் தடிமனான நைட் கிரீம்களைப் பயன்படுத்தினால் மட்டுமே சருமம் இரவில் விரைவாக குணமடையும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் சருமத்திற்கு கிரீமின் அடர்த்தியை விட, அதில் உள்ள பயனுள்ள மூலப்பொருட்களும் நமது சருமத்தின் தன்மையும்தான் முக்கியம்

2 Min read

Published : Jul 23 2026, 04:04 PM IST

15

அடர்ந்த நைட் கிரீம் மட்டுமே சருமத்தைச் சீராக்குமா?

Image Credit : Getty

அடர்ந்த நைட் கிரீம் மட்டுமே சருமத்தைச் சீராக்குமா?

நைட் கிரீம் கெட்டியாக, அடர்த்தியாக இருந்தால் அது இரவில் சருமத்திற்கு அதிக ஊட்டமளித்து விரைவாகப் பொலிவு தரும் என்று பரவலாக நம்பப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இது போன்ற இரவுக் பராமரிப்பு முறைகள் அதிகமாகப் பகிரப்படுகின்றன.

ஆனால், சருமம் பராமரிப்புப் பொருட்களின் தடிமனுக்கு ஏற்பச் செயல்படுவதில்லை; மாறாக அதன் உயிரியல் தேவைகளுக்கு ஏற்பவே செயல்படுகிறது. கிரீமின் அடர்த்தி மட்டுமே அதன் திறனைத் தீர்மானிப்பதில்லை என்பதே நிதர்சனம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

25

அடர்த்தியான கிரீம்கள் யாருக்குப் பயனுள்ளது?

Image Credit : Getty

அடர்த்தியான கிரீம்கள் யாருக்குப் பயனுள்ளது?

வறண்ட சருமம் (Dry skin), வயதான சருமம் (Mature skin) மற்றும் பாதிப்படைந்த சரும அமைப்பைக் கொண்டவர்களுக்குத் தடிமனான நைட் கிரீம்கள் உதவக்கூடும்.

வறண்ட சருமம்: இயல்பாகவே ஈரப்பதம் குறைவாக இருக்கும் என்பதால், செரமைடுகள் (Ceramides), ஃபேட்டி ஆசிட்கள், ஷியா பட்டர் போன்றவை அடங்கிய கிரீம்கள் இரவில் நீர்ச்சத்து வெளியேறாமல் தடுக்க உதவும்.

வயதான சருமம்: வயது கூடும்போது தோலில் இயற்கை எண்ணெய் சுரப்பு குறைகிறது. அப்போது இத்தகைய கிரீம்கள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்க உதவுகின்றன.

35

Image Credit : Getty

எண்ணெய்ப் பசை சருமத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் :

எண்ணெய்ப் பசை (Oily) மற்றும் பருக்கள் வரக்கூடிய சருமம் உள்ளவர்கள் அதிக அடர்த்தியான கிரீம்களைப் பயன்படுத்தினால், அது சருமத்தின் துவாரங்களை அடைத்துவிடும் (Clogged Pores). இதன் காரணமாக வேர்வை, பாக்டீரியா மற்றும் அழுக்குகள் தங்கி, பருக்கள் மற்றும் அலர்ஜி உருவாக வழிவகுக்கும்.

45

Image Credit : Getty

சரியான அடுக்குமுறை (Layering):

அடர்த்தியான கிரீமை நேரடியாகப் பூசுவதை விட, சருமப் பராமரிப்புப் பொருட்களைச் சரியான வரிசையில் பயன்படுத்துவதே சிறந்தது.

மென்மையான சுத்திகரிப்பு (Cleansing): சருமத்தின் இயற்கை எண்ணெயைப் பறிக்காத மென்மையான கிளன்சரைப் பயன்படுத்த வேண்டும்.

ஈரப்பதம் (Hydration): கிரீம் தடவுவதற்கு முன் ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic acid) அல்லது கிளிசரின் கொண்ட லேசான சீரம் தடவி சருமத்திற்கு நீர்ச்சத்து தர வேண்டும்.

முக்கிய சீரம்கள் (Actives): ரெட்டினால் அல்லது பெப்டைட்களைத் தேவைக்கேற்ப கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

கிரீம் பூசுதல் (Seal): உங்கள் சருமத்திற்கு ஏற்ப லோஷன், ஜெல் அல்லது லைட் கிரீம்களைத் தேர்ந்தெடுத்துத் தடவ வேண்டும்.

55

Image Credit : Getty

சருமத்தின் சிக்னல்களைக் கவனியுங்கள் :

சருமப் பராமரிப்பு என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. உங்கள் சருமம் தரும் சமிக்ஞைகளைக் கவனித்து பராமரிப்பை மாற்ற வேண்டும்:

காலையில் எழும்போது முகம் அளவுக்கு அதிகமாக எண்ணெய்ப் பசையுடனும், அடைபட்ட துளைகளுடனும் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் கிரீம் மிகவும் அடர்த்தியானது என்று அர்த்தம்.

மாறாக, சருமம் மிகவும் இழுப்பது போன்று வறட்சியாக இருந்தால், அதிக ஈரப்பதம் தரும் கிரீம் தேவைப்படலாம்.

சருமத்திற்குத் தேவையானதைச் சரியாக அறிந்து அளவோடு தருவதே ஆரோக்கியமான சருமத்திற்கு ஒரே வழி!

Read Entire Article