Last Updated:Feb 16, 2026 9:26 PM IST
TN Budget 2026-27 | தேர்தல் ஆண்டு என்பதால் தமிழ்நாடு அரசு நாளை (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்கிறார்.
வழக்கமான பட்ஜெட்டாக இல்லாமல் இது 'இடைக்கால பட்ஜெட்' என்பதால், புதிய திட்டங்களை விட மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் அதில் இருக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்த அறிவிப்பும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த குழுவின் அறிக்கை பற்றிய தகவல்களும் வெளியிடப்படலாம்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்த நிலையில், மாநில அரசே செயல்படுத்துவது குறித்தும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக விரிவாக்கம் செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண் துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. முக்கிய அறிவிப்புகள் என்ன?
2026-27 இடைக்கால பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை, ஓய்வூதிய திட்டம் அறிவிப்புகள் எதிர்பார்ப்பு
மாநில அரசு மெட்ரோ ரயில், இலவச பேருந்து திட்டங்களை விரிவாக்கும் அறிவிப்புகள் வெளியிடலாம்
காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம், விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும்
.png)





English (US) ·