Last Updated:May 10, 2026 9:21 AM IST
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்வில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4-ம் தேதி வெளியாகின. இதில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தவெகவுக்கு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆதரவு தெரிவித்தது. அவர்களைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தன.
நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிலிருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். கூடுதலாக ஐயூஎம்எல் கட்சி தனது ஆதரவை நல்கியது. இதனால் தவெக பெரும்பான்மையை பெற்றது. தொடர்ந்து தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதன்மூலம், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்த நிலையில், 3ஆவது கட்சியாக தவெக ஆட்சியமைக்க உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்க இருக்கிறார்.
அவருடன் தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, என்.ஆனந்த், அருண் ராஜ், நிர்மல் குமார், ராஜ் மோகன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார். பதவி ஏற்பு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டுள்ளார். அவர் தன்னுடைய தாயாருடன் கலந்துகொண்டார். அத்துடன் விஜயின் நண்பர் சஞ்சீவ் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் விஜய் பதவி ஏற்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)






English (US) ·