TVK Vijay Oath Ceremony Live Updates: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பு!

10 hours ago 10

Last Updated:May 10, 2026 6:59 AM IST

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். இதுதொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழ்நாட்டுடன் தொடர்பில் இருங்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். வரும் 13 ஆம் தேதிக்குள் விஜய் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரால் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay Oath Ceremony Live Updates: விஜய் பதவியேற்பில் ராகுல்காந்தி பங்கேற்பு

நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

TVK Vijay Oath Ceremony Live Updates: விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுகின்றனர்?

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் இடம்பெற உள்ளனர் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை பதவிகளை தன் வசம் வைத்துக் கொள்ள உள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சராக செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக என்.ஆனந்த், மின்சாரத்துறை அமைச்சராக நிர்மல்குமார் ஆகியோர் பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக ஆதவ் அர்ஜூனாவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக ராஜ்மோகனும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முஸ்தபாவும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக அருண் ராஜ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக வெங்கட்ரமணன் ஆகியோர் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாகவும் தெரிகிறது.

TVK Vijay Oath Ceremony Live Updates: விஜயுடன் 10 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு

நேரு உள் விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளார். விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். விஜய் உடன் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது.

TVK Vijay Oath Ceremony Live Updates: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பு!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். வரும் 13 ஆம் தேதிக்குள் விஜய் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரால் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

TVK Vijay Oath Ceremony Live Updates: தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பு!

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்... எந்த நேரத்தில் டீ குடிக்கவே கூடாது தெரியுமா?

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!

  • வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.

  • இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.

  • உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article