Last Updated:May 10, 2026 10:18 AM IST
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே 4-ம் தேதி வெளியாகின. இதில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தவெகவுக்கு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆதரவு தெரிவித்தது. அவர்களைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தன.
நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிலிருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். கூடுதலாக ஐயூஎம்எல் கட்சி தனது ஆதரவை நல்கியது. இதனால் தவெக பெரும்பான்மையை பெற்றது. தொடர்ந்து தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதன்மூலம், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்த நிலையில், 3ஆவது கட்சியாக தவெக ஆட்சியமைத்து உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற விழாவில், விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் விஜய் உடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
முன்னதாக இந்நிகழ்வில் கருப்பு பேண்ட் வெள்ளை சட்டை அணிந்து வந்த விஜயை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பதவி ஏற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அவரை தவிர்த்து தமிழக அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபா கலந்துகொண்டனர். நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். விஜய் உடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)






English (US) ·