TVK Vijay | தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பு!

10 hours ago 9

Last Updated:May 10, 2026 6:47 AM IST

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விஜய்
விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் கூட்டணி மற்றும்  கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை பெற்றது. தொடர்ந்து தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதன்மூலம், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்த நிலையில், 3ஆவது கட்சியாக தவெக ஆட்சியமைக்க உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்க இருக்கிறார்.

அவருடன் தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, என்.ஆனந்த், அருண் ராஜ், நிர்மல் குமார், ராஜ் மோகன், வெங்கட்ராமன் உள்ளிட்ட 10 அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார். பதவி ஏற்பு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read Entire Article