Last Updated:May 10, 2026 10:59 AM IST
TVK Vijay | தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின் முக்கிய கோப்புகளில் கையெழுத்தை போட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின் முக்கிய கோப்புகளில் கையெழுத்தை போட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களை கைப்பற்றியது. இதில், தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
அதில், ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதால், சட்டப்பேரவையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில், 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
பெரும்பான்மைக்கு மேலும் 6 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் தலா இரண்டு எம்எல்ஏக்களை கொண்ட சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தன. தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனைத்தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். பின்னர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், பதவியேற்றபின் விழா மேடையில் முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதில் வீடுகளுக்கு இலவச 200 யூனிட் மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதை பொருள் களைப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார்.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)






English (US) ·