Last Updated:May 09, 2026 9:53 PM IST
TVK Vijay | தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள விஜய் பொறுப்பேற்கவிருக்கும் துறைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றதால் தவெகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டது. 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. திமுகவுடனான தனது கூட்டணியையும் முறித்துக் கொண்டது.
இந்நிலையில், தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஆதரவுக் கடிதத்தையும் வழங்கியுள்ளன. எனவே, தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது. அதன்பிறகு, தலா இரண்டு உறுப்பினர்களை கொண்ட விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் தவெக-வுக்கு ஆதரவு அளித்தன. இதையடுத்து, தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக அதிகரித்தது.
இதையடுத்து பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான கடிதத்தை விஜய் இன்று மாலை ஆளுநரிடம் வழங்கினார். தவெக தரப்பின் கோரிக்கையை ஏற்று, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் அமர்த்தப்படுவதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், தவெக தனது பெரும்பான்மை பலத்தை சட்டமன்ற பேரவையில் 13ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதற்கட்டமாக முதலமைச்சர் விஜயுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கட்சியில் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்கலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, விஜய் தன்வசம் வைத்துக்கொள்ள போகும் துறைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பொது நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்துறை ஆகிய 3 முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை தன்வசம் வைத்திருந்த நிலையில் விஜய் மூன்று துறைகளை தேர்வு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உத்தேச பட்டியல் மட்டுமே. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதே இன்னும் கூடுதல் துறைகளை விஜய் வைத்துக்கொள்கிறாரா? என்பது தெரியவரும்.
இந்நிலையில், பொதுப்பணி துறை - செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகத்துறை - என்.ஆனந்த், மின்சாரத்துறை - நிர்மல்குமார், விளையாட்டு மற்றும் மது விலக்கு துறை - ஆதவ் அர்ஜுனா, ஆதி திராவிடர் நலத்துறை - ராஜ்மோகன், சிறுபான்மை நலத்துறை - முஸ்தபா, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை - அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை - வெங்கட் ரமணன் நாளை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாத் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)







English (US) ·