Last Updated:May 09, 2026 8:28 PM IST
அதேவேளையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இணைய வாய்ப்பிருக்கிறது

தமிழக அரசியல் வரலாற்றின் புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை (மே 10) தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.
முன்னதாக, இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் தனது ஆதரவுக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆளுநரைச் சந்தித்த விஜய், புதிய ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரினார். தவெக-வின் 107 எம்.எல்.ஏ-க்களுடன், கூட்டணி கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். தவெக தரப்பின் கோரிக்கையை ஏற்று, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. .
நாளை முதற்கட்டமாக முதலமைச்சர் விஜயுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகியது.
கட்சியில் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ் (ஐஆர்எஸ்) ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல் குமார், ஜேசிடி பிரபாகர், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு ஆகியயோர் நாளை பதைவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் இடதுசாரி கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெறப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த கட்சிகள் அரசுக்கு வெளியிலிருந்து தங்களது ஆதரவைத் தொடர முடிவு செய்துள்ளன.
அதேவேளையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இணைய வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், நாளை நடைபெறும் முதற்கட்ட பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்றும், இலாகா பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர்கள் பின்னர் பதவியேற்பார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)







English (US) ·