Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம்.. மக்கள் முன்னிலையில் முதல் கையெழுத்து..! வரலாற்றை மாற்றிய CM விஜய்

3 hours ago 14

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோசப் விஜய் மக்கள் முன்னிலையிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திட்டு தமிழக வரலாற்றில் புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். விஜய்யுடன் சேர்த்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன் உட்பட 9 உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து விஜய் மக்கள் முன்னிலையிலேயே முக்கிய கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டு வரலாறு படைத்துள்ளார். பொதுவாக முதல்வர்கள் தாங்கள் பதவியேற்றுக் கொண்ட பின்னர் நேரடியாக தலைமைச் செயலகத்திற்குச் சென்று கோப்புகளில் கையெழுத்திடுவது தான் வரலாறு. ஆனால் தற்போது மக்கள் முன்னிலையிலேயே கோப்புகளில் கையெழுத்திட்டு விஜய் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளார்.

Scroll to load tweet…

அதன்படி 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடியிருப்புகளுக்கு முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய படை, போதைப் பொருள் கலாசாரத்தை தடுக்கும் வகையில் புதிய படையை அமைக்கும் கோப்புகளில் கையெழுத்து அதிரடி காட்டி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதல்வராக முதல்முறை தலைமைச் செயலகத்திற்கு சென்ற விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Scroll to load tweet…

Read Entire Article